"புயல்ங்க" ஈரோட்டில்.. தீப்பொறியாய் பிரச்சாரம்.. இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிக்கு 27-ந்தேதி விடுமுறை
இடைத்தேர்தல் நடக்கும் அனைத்து பகுதியிலும் 27-ந்தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்படுகிறது
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் பணியாற்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசியல் கட்சியினர் வருகை தந்து தீவிர பிரசாரம் செய்து வரும் நிலையில், இடைத்தேர்தல் நடக்கும் அனைத்து பகுதியிலும் 27-ந்தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது... இன்னும் தேர்தலுக்கு 13 நாட்களே உள்ள நிலையில், பிரச்சாரம் ஈரோடு கிழக்கில் சூடு பிடித்துள்ளது.
தேர்தல் பொறுப்பாளர்கள் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் தங்கி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உதயநிதி அறிவிப்பு
திமுக தலைவர்களும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் வரும் 24ம் தேதி பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.. எடப்பாடி பழனிசாமி, நாளை முதல் அதாவது 15, 16, 167 மற்றும் 24, 26 தேததிகளில் பிரச்சார வேனில் வீதி வீதியாக சென்று தென்னரசுவை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். உதயநிதி ஸ்டாலினும், வரும் 19 ம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.. மநீம தலைவர் கமல்ஹாசனும் 19ம் தேதி பிரச்சாரம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

விஜயபாஸ்கர்
தலைவர்கள் அடுத்தடுத்து வர உள்ள நிலையில், தற்போது, அமைச்சர்கள் முத்துசாமி, கேஎன் நேரு, எவ வேலு, சாமிநாதன், பெரியசாமி, செந்தில்பாலாஜி, செஞ்சி மஸ்தான் உள்ளிட்ட அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோல, அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசுவுக்கு வாக்கு சேகரிக்கும் வகையில், முன்னாள் அமைச்சர்களும் நிர்வாகிகளும் களமிறங்கி உள்ளனர்... அதிமுகவில் செங்கோட்டையன், கேவி ராமலிங்கம், கருப்பணன், விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, செல்லூர் ராஜு, பாண்டியராஜன் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

மேனகா நவநீதன்
அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பாஜக நிர்வாகி முருகானந்தம், எம்எல்ஏ சரஸ்வதி உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்... தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.. காலை 6 மணிக்கு வீடு, வீடாகச் சென்று பிரச்சாரத்தை தொடங்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் 10 மணிவரை பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். தொடர்ந்து, தேர்தல் பணிமனையில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.

சுழற்சி முறையில்
மதிய உணவுக்கு பிறகு, சிறிது நேரம் ஓய்வெடுக்கச் செல்லும் தலைவர்கள் மீண்டும் மாலை 4 மணிக்கு தொடங்கி, 10 மணி வரை பிரச்சாரத்தை தொடர்கின்றனர். இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதுமே, தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிட்டன... தேர்தலில் பொதுமக்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய தேர்தல் கமிஷன்
இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ந்தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில், ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதியில் 27-ந்தேதி (திங்கட்கிழமை) இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. எனவே 27-ந்தேதியை பொதுவிடுமுறையாக அரசு அறிவிக்கிறது. அதற்கான உத்தரவை தமிழக கவர்னர் பிறப்பித்துள்ளார்.

விடுமுறை
27-ந்தேதி விடுமுறை அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கும் அனைத்து பகுதியிலும் பொதுவிடுமுறை அறிவிக்கப்படுகிறது. ஈரோடு மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் பணியாற்றும் வாக்காளர்களுக்கும் (ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்துள்ளவர்களுக்கு மட்டும்) 27-ந்தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு கட்டுப்பாட்டில் உள்ள தொழில்நிறுவனங்கள், அனைத்து கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications