அதென்ன பேப்பர்?.. பெரிய பிளானுடன் வருகிறார் எடப்பாடி பழனிசாமி.. இன்று ஈரோட்டில் முதல்கட்ட பிரச்சாரம்
இன்று தன்னுடைய முதல்கட்ட பிரச்சாரத்தை ஈரோட்டில் துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய முதல்கட்ட பிரச்சாரத்தை இன்று தொடங்குகிறார்... இதையடுத்து, அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க அதிமுக நிர்வாகிகள் தயாராகி வருகிறார்கள்.
நெருங்கி வரும் இடைத்தேர்தலை முன்னிறுத்தி, தேர்தல் பொறுப்பாளர்கள் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் தங்கி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக தலைவர்களும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.. திமுகவின் முக்கிய தலைவர்கள் மட்டுமல்லாமல், அமைச்சர்கள், நிர்வாகிகள் என அனைவருமே ஈரோட்டில் களப்பணியில் இறங்கி உள்ளனர்..

கமல்ஹாசன்
முதல்வர் ஸ்டாலின் வரும் 24ம் தேதி ஈரோட்டில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.. உதயநிதி ஸ்டாலினும், வரும் 19 ம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.. மநீம தலைவர் கமல்ஹாசனும் 19ம் தேதி பிரச்சாரம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறார். தலைவர்கள் அடுத்தடுத்து வர உள்ள நிலையில், திமுகவின் அமைச்சர்களும், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும் தொகுதியில் படுபிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.. அந்தவகையில், இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய முதல்கட்ட பிரச்சாரத்தை ஈரோட்டில் துவங்குவதால் பெரிய எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.

பக்கா பிளான்கள்
அதிமுக வேட்பாளரை ஆதரித்து தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள்... இவர்களுடன் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர்.. இந்த இடைத்தேர்தல் எடப்பாடி பழனிசாமிக்கு மிக முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது.. எப்படியாவது பலமான வாக்கு வங்கியை பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன் பல்வேறு பிளான்களை வகுத்து வருகிறார்.. அந்தவகையில்தான் 2கட்டமாக மொத்தம் 5 நாட்கள் பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.

இன்று ஆரம்பம்
அதன்படி எடப்பாடி பழனிசாமி இன்று அதாவது 15-ம் தேதி தன்னுடைய முதல் கட்ட பிரச்சாரத்தை தொடங்குகிறார். மாலை 5 மணியளவில் வீரப்பன் சத்திரம் பகுதி, பெரியார் நகர் பகுதிகளில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து வீரப்பம்பாளையம், வெட்டுகாட்டு வலசு, நாராயண வலசு, டவர் லைன் காலனி, குமலன் குட்டை மாரியம்மன் கோவில் அருகில், கலெக்டர் அலுவலகம், சம்பத் நகர், பெரிய வலசு நால்ரோடு, கல்யாண விநாயகர் கோவில், இடையன்காட்டு வலசு, மணிக்கூண்டு ஆகிய இடங்களில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

மாஸ் பிளான்கள்
பின்னர் வீரப்பன்சத்திரம் பகுதியில் இந்த முதல் நாள் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார். தொடர்ந்து 16, 17-ம் தேதிகளில், அதாவது நாளை மற்றும் நாளை மறுநாளும் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்ய போகிறார்.. இதற்கு பிறகு, 2-வது கட்ட பிரசாரத்தை அடுத்த வாரம் 24, 25-ம் தேதிகளில் மேற்கொள்கிறார். எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்ய வருவதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.. கடந்த சில நாட்களாகவே எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார பிளான் குறித்த தகவல்கள் லேசாக கசிந்தன..

லிஸ்ட் ரெடி
அதாவது, திமுகவுக்கு எதிரான பிரச்சாரத்தை, சரியான வடிவில் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் எடப்பாடி டீம் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறதாம்.. வழக்கம்போல் ஆளும்கட்சி மீதான விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் என்றாலும், இந்த முறை எடப்பாடி டீம், திமுக அரசுக்கு எதிரான விஷயங்களை எல்லாம் லிஸ்ட் போட்டு கையில் வைத்துள்ளாராம் எடப்பாடி.. இவைகளை அம்மக்களிடம் கொண்டு செல்லும்போது, இதன் மூலம் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்த முடியும் என்றும் கணக்கு போட்டுள்ளாராம். அந்தவகையில், இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரம் மிகுந்த எதிர்பார்ப்பை ஈரோட்டில் ஏற்படுத்தி வருகிறது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications