ஈரோடு இடைத்தேர்தல்.. பரோட்டா சுட்டு வாக்கு சேகரித்த செஞ்சி மஸ்தான்.. பரபரக்கும் தேர்தல் களம்!
பரோட்டா சுட்டு வாக்கு சேகரித்த செஞ்சி மஸ்தான் வீடியோ வேகமாக பரவி வருகிறது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பரோட்டா சுட்டு அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரித்துள்ளார். தேர்ந்த பரோட்டா மாஸ்டர் போல் பரோட்டா சுட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தானின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிப்.27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோல் அதிமுக சார்பாக தென்னரசு, தேமுதிக சார்பாக ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா உள்ளிட்டோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக பிரச்சாரம்
இதன் காரணமாக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஒரு பக்கம் அதிமுகவினர் தேர்தல் பணிகளை விரைவுபடுத்தியுள்ள நிலையில், ஒன்னொரு பக்கம் திமுக கூட்டணி வேட்பாளரை வெற்றிபெற வைக்க அமைச்சர்கள் தெருத் தெருவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். திமுக தரப்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிக்காக 11 அமைச்சர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

கவனத்தை ஈர்த்த அமைச்சர்
இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைச்சர்கள் முத்துசாமி, கே.என்.நேரு, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவினரோடு சேர்ந்து காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். வாக்கு சேகரிக்கும் பணிகள் ஒவ்வொரு தீவிரமாகி வரும் நிலையில், அமைச்சர் செஞ்சி மஸ்தான் மக்களிடையே கவனத்தை ஈர்க்கும் வகையில் புதிய யுக்தியை கையாண்டுள்ளார்.

செஞ்சி மஸ்தான்
ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், திடீரென தள்ளுவண்டி ஹோட்டல் அருகே சென்றார். பின்னர் தள்ளுவண்டி கடையில் பரோட்டா போட்டிக் கொண்டிருந்த தொழிலாளியிடம் ஓய்வெடுக்க கூறிய செஞ்சி மஸ்தான், பரோட்டா போடும் பணியை செய்ய தொடங்கினார்.

பரோட்டா போட்ட அமைச்சர்
சப்பாத்தி கட்டையை கையில் எடுத்து பரோட்டாவை தேய்த்து, தேர்ந்த பரோட்டா மாஸ்டர் போல் பரோட்டாவை வீசி, இறுதியாக எண்ணெய் ஊற்றி கல்லில் போட்டு பரோட்டா சுட்டார். இது அப்பகுதி மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதேபோல் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பரோட்டா சுட்ட வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications