நாங்கதான் “ஃபர்ஸ்ட்”.. 7 மணிக்கே வாக்களித்த ஈரோடு கிழக்கு நாம் தமிழர் வேட்பாளர் மேனகா
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர் மேனகா வரிசையில் நின்று வாக்களித்தார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா காலை 7 மணிக்கே வாக்குச்சாவடிக்கு வருகை தந்து வரிசையில் நின்று வாக்களித்தார்.
கடந்த ஜனவரி மாதம் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா காலமானார். இதனால் இன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தொகுதியில் இன்று பதிவாகும் வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

77 வேட்பாளர்கள்
அதிமுக வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் உட்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நாம் தமிழர் வேட்பாளர்
இதனை அடுத்து 7 மணிக்கே ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளின் முன்பு திரண்ட மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களின் வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகிறார்கள். அந்த வகையில் கலைமகள் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 7 மணிக்கே வந்து நீண்ட வரிசையில் நின்று தன்னுடைய வாக்கை செலுத்தினார்.

ஏற்பாடுகள் நன்றாக உள்ளது
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மக்கள் அனைவரு வாக்களிக்க கிளம்பி வர வேண்டும். வீதிகளில் இறங்கி போராடுவதை தவிர்க்க வீடுகளை தாண்ட வாங்க. வாக்களிக்க வாங்க. தேர்தல் ஏற்பாடுகள் நன்றாக உள்ளது. நானும் வந்து பார்த்தேன். மக்கள் ரொம்ப ஆர்வமாக வாக்களிக்க வந்துகொண்டு இருக்கிறார்கள்.

இதே நிலை தொடர வேண்டும்
ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. வெற்றி வாய்ப்புகள் நன்றாக இருக்கிறது. மக்கள் ஆர்வமாக இருப்பதை பார்க்கும்போது எனக்கு தெரிகிறது. காவல்துறை, தேர்தல் அலுவலர்கள் எல்லோரும் கண்டிப்புடன் நடந்துகொள்கிறார்கள். இது அப்படியே தொடர வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்." என்று தெரிவித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications