பொது வேட்பாளர்.. புது கான்செப்ட்டை கையில் எடுத்த சீமான்.. எடப்பாடி, அண்ணாமலையை சந்திக்க திட்டம்? அட
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் நிலையில் அதன் வேட்பாளரை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்க நாம் தமிழர் சீமான் முயன்று வருகிறாராம்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் இருந்து பெரிய கட்சிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றன. பாஜக இதில் போட்டியிடவில்லை. அதிமுக போட்டியிடவில்லை. அதேபோல் தேமுதிகவும் போட்டியிடவில்லை.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்குமென்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. . பிப்ரவரி 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய வரும் 17ம் தேதி கடைசி நாள் ஆகும். இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் 20ம் தேதி வெளியாகும். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
நாம் தமிழர் போட்டி:
பொங்கல் அன்றுதான் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அதன்படி நாதக சார்பில் மா.கி.சீதாலட்சுமி போட்டியிடுகிறார். சீதாலட்சுமி, ஆசிரியராகப் பணியாற்றியவர். அவருடைய சொத்து மதிப்பு சுமார் 1 கோடி.
இடைத்தேர்தலில் திமுகவை எதிர்க்கத் துணிவில்லாமல் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் இடைத்தேர்தலை புறக்கணித்து விட்டன. புறக்கணிப்புக்கு ஆளாளுக்கு ஒரு காரணம் சொன்னாலும் அனைத்துக் காரணங்களும் ஒரே நேர்கோட்டில் தான் இருக்கின்றன. திமுக வேட்பாளரை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளரை களமிறக்கியிருக்கிறார் சீமான்.
எந்த தேர்தலையும் புறக்கணிக்காத சீமான் மட்டுமே இந்த தேர்தலையும் எதிர்கொள்கிறார்.
பிரதான எதிர்க்கட்சிகள், முக்கிய கட்சிகள் எல்லாம் தேர்தலை புறக்கணித்திருக்கும் சூழலில், திமுகவை வீழ்த்த, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரிக்க எதிர்க்கட்சிகளின் ஆதரவைக் கேட்கும் திட்டத்தில் சீமான் இருக்கிறார். இறுதி வேட்பாளர் பட்டியல் ரிலீஸ் ஆகி, தனது கட்சி வேட்பாளர் மனுவுக்கு எந்த சிக்கலும் இல்லாத நிலைக்கு பிறகு, பொது வேட்பாளர் என்ற கான்செப்ட்டை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகளின் தலைவர்களிடம் பேசவிருக்கிறார் சீமான் என்கின்றன தகவலறிந்த வட்டாரம். இதற்கிடையே, எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்திருப்பதால் அவர்களின் திட்டம் என்ன ? அக்கட்சிகளின் வாக்குகள் குறித்த நிலைப்பாடு என்ன? என்பதை அறியும் நோக்கில் கவனம் செலுத்தியுள்ளதாம் திமுக தலைமை.
திமுக போட்டி:
ஏற்கனவே இந்த தேர்தலை புறக்கணிப்பதாக பாஜக, அதிமுக அறிவித்துவிட்டது. இந்த ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் திமுக இந்த முறை போட்டியிடுகிறது. நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கலந்து பேசியதில், திராவிட முன்னேற்றக் கழகம், இந்த தொகுதியில் போட்டியிடுவதாக முடிவு எடுக்கப்பட்டது.
வருகிற 05-02-2025 அன்று நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.கழக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் கழக வேட்பாளராக, வி.சி.சந்திரகுமார் (தி.மு.ககொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்) போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துவிட்டது. இந்த ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் திமுக இந்த முறை போட்டியிடுகிறது. நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கலந்து பேசியதில், திராவிட முன்னேற்றக் கழகம், இந்த தொகுதியில் போட்டியிடுவதாக முடிவு எடுக்கப்பட்டது.
வருகிற 05-02-2025 அன்று நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.கழக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் கழக வேட்பாளராக, வி.சி.சந்திரகுமார் (தி.மு.ககொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்) போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications