புட்டு புட்டு வைத்த மேனகா.. அம்பலமாயிடுச்சே.. கூடுகிறது நெருக்கடி.. கொந்தளிக்கும் சீமானின் தம்பிகள்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா உள்ளிட்டோர் மீது மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
ஈரோடு: நாங்க என்ன தப்பு செய்தோம்? மக்களை சந்தித்து எங்கள் கொள்கையைத்தானே கொண்டு போய் சேர்க்கிறோம்? நாங்கள் எந்த அத்துமீறலும் செய்யவில்லையே? எங்கள் மீது மாறி மாறி வழக்குப்பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். வழக்கைப் பார்த்து நாங்கள் பயப்பட போவதில்லை" என்று நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மேனகா அறிவிக்கப்பட்டுள்ளார். தொகுதியில் இவரது பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது.. ஆனால், அனுமதியின்றி பேரணி நடத்தியதாக அவர் மீது ஏற்கனவே புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுதல், அனுமதி பெறாமல் பேரணி செல்லுதல், கட்சியின் சின்னத்தை கையில் ஏந்தி பேரணி என 3 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மேனகா நவநீதன் மீது இரண்டாவதாக ஒரு வழக்கு பதிவாகியுள்ளது.

ஆலமரத்தெருவிலே
கடந்த 20ம் தேதி ஆலமரத்தெருவில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா உட்பட 30 பேருக்கும் மேற்பட்டோர் பரப்புரை மேற்கொண்டனர். இது தொடர்பாக தேர்தல் விதிகளை மீறி பிரச்சாரம் நடத்தியதாக வேட்பாளர் மேனகா மற்றும் 30 பேர் மீது பறக்கும் படையினர் போலீசில் புகார் தந்தனர். இந்த புகாரையடுத்து தெற்கு போலீசார் நாதக வேட்பாளர் மேனகா மற்றும் 30 பேர் மீது தேர்தல் விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இதுவரை எந்த வேட்பாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படாத நிலையில் முதன்முறையாக நாதக வேட்பாளர் மேனகா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புது பரபரப்பு
அதாவது, நேற்று முன்தினம் மதியம் மரப்பாலம் பகுதியில் மேனகா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பிரச்சாரம் செய்ய சென்றுள்ளனர்.. அப்போது அங்கு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவாக சீமான் பேசியது குறித்து சர்ச்சை எழுந்தது.. இதனால் 2 தரப்பினரும் வாக்குவாதம் செய்தனர். மேலும், தங்கள் பகுதியில் ஓட்டு சேகரிக்கக் கூடாது என்று நாம் தமிழர் கட்சியினரை தடுத்து திருப்பி அனுப்பி வைத்தனர். ஆனாலும் அதே பகுதியில் வேறு வீதியில் வீடு வீடாகச் சென்று நாம் தமிழர் கட்சியினர் நோட்டீஸ் விநியோகித்து ஓட்டு சேகரித்தனர். இதற்கு முறையான அனுமதி பெறவில்லை என்று, பறக்கும் படையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின்படியே வேட்பாளர் மேனகா உள்பட 24 பேர் மீது சூரம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.

தகுதி நீக்கம்
இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர் மேனகா, "தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது... வாக்காளர்களுக்கு எல்லாவிதமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது... இப்போது அது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது... ஆனால் இது குறித்து தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? அப்படி நடவடிக்கை எடுத்திருந்தால் சம்பந்தப்பட்ட கட்சியின் வேட்பாளரை இந்நேரம் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும்.. அதை செய்யாமல் மக்களை சந்திக்க போன என் மீது ஏன் வழக்கு பதிவு செய்ய வேண்டும்?

தப்பா செஞ்சோம்
நாங்க என்ன தப்பு செய்தோம்? மக்களை சந்தித்து எங்கள் கொள்கையைத்தானே கொண்டு போய் சேர்க்கிறோம்? நாங்கள் எந்த அத்துமீறலும் செய்யவில்லையே? ஆளுங்கட்சியினர் அத்துமீறி செயல்பட்டதாக கூறி பணிமனைகளை எல்லாம் தேர்தல் அதிகாரிகள் மூடிவிட்டார்கள்.. ஏதோ பண்ண வேண்டும் என்பதற்காக அந்த 10 பணிமனைகளையும் மூடி இருக்கிறார்கள்... நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்க போகிறது என்பதற்காக ஆளுங்கட்சியினர் நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்... எங்கள் மீது மாறி மாறி வழக்குப்பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.. வழக்கை பார்த்து நாங்கள் ஒன்றும் பயப்பட போவதில்லை" என்றார் ஆவேசத்துடன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications