ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவினர் பேரம் பேசினார்களா? குழப்பிய நாதக வேட்பாளர் சீதாலட்சுமி!
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று திமுகவினர் யாரும் பேரம் பேசவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார். வேறு யாரும் பேரம் பேசினார்களா என்ற கேள்விக்கு குழப்பமான பதிலை அளித்த சீதாலட்சுமி, திமுக உடனான போராட்டம் கருத்தியல் ரீதியிலானது என்றும் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்.5ஆம் தேதி நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக விசி சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பாக சீதாலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இன்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில், இருவரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டது.
இதனால் இடைத்தேர்தலில் திமுக vs நாதக நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இதனிடையே நேற்றிரவு திமுக பிரமுகர் ஒருவர் நாதக வேட்பாளர் சீதாலட்சுமியிடம் பேரம் பேசியதாக சில பதிவுகள் வெளியாகியது. இதுகுறித்து நாதக வேட்பாளர் சீதாலட்சுமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திமுக பிரமுகர் பேரம் பேசியதாக நான் எங்கும் பதிவு செய்யவில்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து நீங்கள் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இதுதொடர்பாக குறுந்தகவல் அனுப்பியதாக சில தகவல் வந்துள்ளது என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, இந்த விவகாரம் எனக்கும் சீமான் அண்ணனுக்கும் இடையிலான தனிப்பட்ட விஷயம். திமுகவை தத்துவார்த்த ரீதியாக மட்டுமே எதிர்க்கிறேன்.
அதற்காக இங்குள்ள திமுகவினரை என்னால் வெறுக்க முடியாது. கருத்தியல் ரீதியாக எதிர்த்து போராடுகிறேன். வாட்ஸ் அப்பில் வந்த பதிவுக்கு நான் பொறுப்பல்ல. என்னிடம் யாராவது பேரம் பேசினார்களா என்ற கேள்வியால் மக்களுக்கு எந்த பிரயோஜனமும் கிடையாது. இந்த கேள்விக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. இந்த கேள்வியை திமுகவினரை பார்த்து தான் கேட்க வேண்டும்.
திமுக வேட்பாளர் சந்திரகுமாரை பார்க்கும் போது அண்ணா.. வணக்கம் என்று சொல்வேன். என்னிடம் பேரம் பேசினார்களா என்றால், திமுக தரப்பில் என்னிடம் யாரும் பேசவில்லை. தனிப்பட்ட முறையில் என்னிடம் போட்டியிட வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. போட்டியில் இருந்து விலகி கொள் என்றும் யாரும் சொன்னாலும், பணிய மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications