பாஜகவிடம் "சரண்டர்" ஆன ஓபிஎஸ்? எடப்பாடியின் முழு கட்டுப்பாட்டில் அதிமுக! அடித்து சொன்ன "எக்ஸ்பர்ட்"
எடப்பாடி இந்த ஈரோடு தேர்தலில் அதிமுகவை கட்டுப்படுத்துவார். அவர் தோல்வி அடைந்தாலும் கட்சி அவரிடம் இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்து உள்ளார்.
ஈரோடு: பாஜகவிடம் ஓ பன்னீர்செல்வம் சரண்டர் ஆகிவிட்டார், அவர் அதிமுகவையும் பாஜகவிடம் அடகு வைக்க பார்க்கிறார். தினம் தினம் தனது செய்கைகள் மூலம் ஓ பன்னீர்செல்வம் இதை நிரூபிக்கிறார், என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்து உள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் சூடு பிடித்துள்ளது. ஓ பன்னீர்செல்வம் தனது தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். முன்னதாக வேட்பாளரை அறிவித்த அவர் பாஜக வேட்பாளர் களமிறக்கினால் தனது தரப்பு போட்டியை வாபஸ் பெறுவதாக கூறி இருந்தார்.
இந்த நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காததாலும், பாஜக கேட்டுக்கொண்டதால் ஓ பன்னீர்செல்வம் தற்போது வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளார். ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்கு இடையில் நாளுக்கு நாள் பாஜகவுடன் ஓ பன்னீர்செல்வம் நெருக்கம் ஆகி வருகிறார். ஓ பன்னீர்செல்வத்தின் இந்த செயல் குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

எடப்பாடி
அவர் அளித்த பேட்டியில், அதிமுகவில் நடப்பது எல்லாவற்றையும் ஜெயலலிதாவும், எம்ஜிஆரும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். பாஜகவிடம் இப்படி அதிமுக பணிந்து போவதை இவர்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். பாஜகவிடம் மோத முடியவில்லை என்றால் ஓ பன்னீர்செல்வம் பாஜகவிடம் அடி பணியலாம். அவரிடம் சொந்தமாக கட்சி இருந்தால் அவர் கண்டிப்பாக பாஜகவிடம் அடி பணிந்து போகலாம். பாஜகவிடம் கட்சியை அடகு வைக்கலாம். ஆனால் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவை ஏன் அடகு வைக்க பார்க்கிறார். நான் போட்டியிடுவேன் . பாஜக இங்கே போட்டியிட்டால் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பேன் என்று ஓ பன்னீர்செல்வம் சொல்கிறார்.

ஓ பன்னீர்செல்வம் பேச்சு
அப்படி சொல்ல ஓ பன்னீர்செல்வத்திற்கு என்ன தகுதி இருக்கிறது? அது அதிமுக சின்னம் முன்பே நின்ற தொகுதி. இதற்கு முன்பே அங்கு அதிமுக வென்று இருக்கிறது. இந்த தொகுதியை ஓ பன்னீர்செல்வம் பாஜகவிற்கு தாரை வார்ப்பேன் என்று எப்படி கூற முடியும். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான் என்று கூறும் ஓபிஎஸ்.. . நான் போட்டியிடுவேன் . பாஜக இங்கே போட்டியிட்டால் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பேன் என்று ஓ பன்னீர்செல்வம் சொல்கிறார். அவரின் பேச்சு சரியா.. அவர் பாஜக காலில் விழுந்துவிட்டார்.. சரண்டர் ஆகிவிட்டார் என்று எடப்பாடி தரப்பினர் வைக்கும் புகார்களை ஓ பன்னீர்செல்வம் தற்போது உண்மை என்று நிரூபித்து உள்ளார்.

நிரூபித்துவிட்டார்
தினம் தினம் தனது செய்கைகள் மூலம் ஓ பன்னீர்செல்வம் இதை நிரூபிக்கிறார். அதிமுகவில் தனக்கு ஆதரவு இல்லை என்பதால் ஓ பன்னீர்செல்வம் பாஜக நோக்கி நகர்கிறார். இதனால் அதிமுகவை விட்டு ரொம்ப தூரம் ஓ பன்னீர்செல்வம் தள்ளி போய்விட்டார். இது ஓ பன்னீர்செல்வத்திற்கும் தெரியும். கட்சி, தொண்டர்கள், நிர்வாகிகள் எல்லாம் எடப்பாடி பக்கம்தான் இருக்கிறார். அவருக்கு நான் சப்போர்ட் செய்யவில்லை. ஆனால் எடப்பாடி இருந்தால்தான் அதிமுக வலிமையாக இருக்கும். அதிமுக வலிமையாக இருந்தால்தான் தமிழ்நாடு அரசியல் நன்றாக இருக்கும். அவர்கள் மீது ஆயிரம் குறைகள் இருந்தாலும், அவர்களும் மதச்சாற்பற்ற கட்சிதான் என்பதை மறக்க வேண்டாம்.

அதிமுக அவசியம்
அதிமுக துடிப்புடன் இருப்பது அவசியம். அதை எடப்பாடி செய்து கொண்டு இருக்கிறார். ஆனால் ஓ பன்னீர்செல்வம் அப்படியில்லை. அவர் பாஜகவை சார்ந்து நிற்கிறார். அவர் செய்வது தவறு.. ஓ பன்னீர்செல்வம் செல்லாக்காசு ஆகிவிட்டார். எடப்பாடி இந்த ஈரோடு தேர்தலில் அதிமுகவை கட்டுப்படுத்துவார். அவர் தோல்வி அடைந்தாலும் கட்சி அவரிடம் இருக்கும். இங்கே ஆளும் கட்சிதான் வெல்லும். ஆனால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் எடப்பாடிக்கு ஆதரவு பெருகும். பாஜகவை சார்ந்து இருந்த ஓ பன்னீர்செல்வம் படிப்படியாக காணாமல் போய்விடுவார், என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications