அம்மாடி.. ரூ. 30 கோடியா? மீட்டிங்கில் ஓபிஎஸ் சொன்னதை கேட்டு ஓடிய "தலைகள்".. ஒருத்தரும் வரலையாமே?
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் பாஜக போட்டியிடவில்லை என ஓபிஎஸ்சிடம் பாஜக தலைமை உறுதியாக சொல்லிவிட்டதாக ஓ பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்தான் மா.செ.க்கள் கூட்டத்தில், ' வேட்பாளரை நாம் கண்டிப்பாக நிறுத்துவோம் ' என்று பேசி இருக்கிறாராம் ஓபிஎஸ்.
பிப்ரவரி 27ம் தேதி நடக்க உள்ள ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் உச்ச கட்ட பரபரப்பை அடைந்து உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் அதிமுக கட்சிக்குள் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே உட்கட்சி மோதல் உச்சத்தில் இருந்த அதிமுகவில் ஈரோடு கிழக்கு இடைதேர்தலால் மேலும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி சார்பாக அதிமுக அணி வேட்பாளர் களமிறக்கப்பட உள்ளார். அதேபோல் ஓ பன்னீர்செல்வம் சார்பாக அவரது ஆதரவாளரும் களமிறக்கப்பட உள்ளார்.

அதிமுக
நாங்கள்தான் உண்மையான அதிமுக. என்னால் சின்னம் முடங்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. சின்னம் முடங்காமல் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கட்சியில் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. இங்கே வேட்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிப்போம். இங்கே பாஜக போட்டியிட்டால் நாங்கள் பாஜகவிற்கு ஆதரவு கொடுப்போம். இல்லையென்றால் நாங்களே போட்டியிடுவோம் என்று ஓ பன்னீர்செல்வம் கூறி உள்ளார். ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி என்று அதிமுகவின் இரண்டு அணியும் இதில் மோதுவதால் எங்கே சின்னம் முடங்கிவிடுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் இரண்டு தரப்பும் அடுத்தடுத்து பல்வேறு மீட்டிங்குகளை நடத்தி வருகின்றன.

எடப்பாடி
இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமியோ, சின்னம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், பாஜக போட்டியிட்டாலும் போட்டியிடாவிட்டாலும் நம்முடைய தரப்பு போட்டியிடுவது அசைக்க முடியாத அளவுக்கு உறுதி என்ற நிலையில் இருக்கிறது. இதனால் எடப்பாடியின் வேட்பாளரை எதிர்த்து ஓபிஎஸ் தனது தரப்பில் வேட்பாளரை நிறுத்துவது கட்டாயமாகியிருக்கிறது. வேட்பாளரை நிறுத்துவதில் ஓபிஎஸ் பின்வாங்கமாட்டார் என அவரது ஆதரவாளர்கள் அடித்துக் கூறுகிறார்கள். நேற்று இது தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் ஆலோசனையும் செய்து இருக்கிறார். ஈரோடு கிழக்கில் என்ன செய்யலாம் என்பது தொடர்பாக ஆலோசனை செய்துள்ளனர். ஓ பன்னீர்செல்வத்திற்கு தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வரும் பண்ட்ருட்டி ராமசந்திரன் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.

ஆலோசனை
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் பாஜக போட்டியிடவில்லை என ஓபிஎஸ்சிடம் பாஜக தலைமை உறுதியாக சொல்லிவிட்டதாக ஓ பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்தான் மா.செ.க்கள் கூட்டத்தில், ' வேட்பாளரை நாம் கண்டிப்பாக நிறுத்துவோம் ' என்று பேசி இருக்கிறாராம் ஓபிஎஸ். இந்த நிலையில், குறைந்தபட்சம் 30 கோடி ரூபாய் செலவு செய்யக்கூடிய நபர் நம்மிடம் யார் இருக்கிறார்கள் என தேடிக்கொண்டிருக்கிறார் ஓபிஎஸ். அவரால் வளர்க்கப்பட்ட ரியல் எஸ்டேட் அதிமுகவினர் கூட ஓபிஎஸ்சுக்காக களமிறங்க தயங்கி வருகின்றனர். இதனால் வேட்பாளர் கிடைக்காமல் திண்டாடுகிறார் ஓபிஎஸ்.

திண்டாட்டம்
தேவையின்றி தேர்தலில் போட்டியிட்டு காசை இழக்க அவர்கள் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. ஓ பன்னீர்செல்வமும் எனக்கு கோர்ட் செலவிற்கே காசு சரியாக இருக்கிறது. என்னால் இந்த தேர்தலுக்கும் செலவு செய்ய முடியாது என்ற நிலைப்பாட்டில் இருக்கிறாராம். கணிசமான கோடிகளை செலவு செய்யக் கூடிய நபர்கள் ஓபிஎஸ் தரப்பில் இருந்தாலும், ' ஜெயிக்க முடியாது. தோற்றுப் போவோம் என தெரிந்தும் செலவு செய்வது சரியாக இருக்காது' என வைத்தியலிங்கத்திடம் அவர்கள் புலம்பி வருகிறார்கள். இதனால், அப் செட்டாகியுள்ள ஓபிஎஸ், வேட்பாளர் வேட்டையில் தீவிரமாகியிருக்கிறார் என்கிறார்கள் அவரது தரப்பினர்.












Click it and Unblock the Notifications