கீழே வாங்க.. கரைவேட்டியை பார்த்து.. ஆசையாக இறங்கிய அதிமுக வேட்பாளர்! சுத்து போட்ட ஓபிஎஸ் டீம்! பகீர்
அதிமுக தரப்பு தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் ஓ பன்னீர்செல்வம் வெளியே வராமல் வீட்டிற்கு உள்ளேயே முடங்கி உள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பிரச்சாரத்தில் ஓ பன்னீர்செல்வம் ஆட்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் கே. எஸ் தென்னரசுவை வழிமறித்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் பெரும் போராட்டத்திற்கு பின் எடப்பாடி பழனிசாமி ஆதரவு வேட்பாளர் கே. எஸ் தென்னரசு களமிறக்கப்பட்டு உள்ளார். இவருக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டுவிட்டது.
இவர்தான் தற்போது அதிமுகவின் பொதுவேட்பாளர். இதையடுத்து கே.எஸ் தென்னரசு வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டார்.

பிரச்சாரம்
தற்போது கே. எஸ் தென்னரசு ஈரோடு கிழக்கு தேர்தலுக்காக தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். வீடு வீடாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். ஈரோடு கிழக்கில் தேர்தல் பணிகளை கவனிக்க, முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள் உள்ளடக்கிய 117 பேர் கொண்ட மிகப்பெரிய தேர்தல் பணிக்குழுவை அமைத்தார் எடப்பாடி. தேர்தல் பணிகளை இவர்கள் யாரும் சரியாக செய்யவில்லை என்று எடப்பாடிக்கு புகார் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 5 நாட்களாக வெளிமாவட்டத்தை சேர்ந்த அதிமுக வி.ஐ.பி.நிர்வாகிகள் யாரும் தொகுதியில் இல்லை. இதனால் எடப்படியே அங்கு தீவிரமாக இறங்கி பிரச்சாரம் செய்கிறார்.

கே. எஸ் தென்னரசு
இன்னொரு பக்கம் தென்னரசுவும் நேரடியாக இறங்கி பிரச்சார பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில்தான் நேற்று தென்னரசு வாகனம் ஒன்றில் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கே அதிமுக நிர்வாகிகள் பலர் சாலையில் நின்றனர். இவர்களை பார்த்த தென்னரசு வணக்கம் வைத்தார். அப்போது தென்னரசுவை கீழே இறங்கி வரும்படி அதிமுகவினர் கோரிக்கை வைத்தனர். கீழே வாங்கண்ணே என்றதும்.. கரை வேட்டியை பார்த்து அதிமுக என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு தென்னரசு கீழே இறங்கி வந்தார்.

என்ன நடந்தது?
ஆனால் அவர் கீழே இறங்கியதும்.. அங்கு நின்று இருந்தவர்கள்.. சட்டென தங்களை ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டனர். இதனால் தென்னரசு ஒரு கணம் திகைத்து போனார். கிட்டத்தட்ட ஓ பன்னீர்செல்வம் ஆட்கள் தென்னரசுவை சுத்து போட்டது போல அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஓ பன்னீர்செல்வம் ஆட்கள் அவரிடம்.. தென்னரசு அண்ணே நீங்க வெற்றிபெற வாழ்த்துக்கள். உங்களுக்கு நாங்கதான் வாழ்த்து சொல்லுவோம். ஆனா நீங்க ஓபிஎஸ் அண்ணே பெயரையே சொல்ல மாட்டறீங்க. தலைவர்கள் பெயர்ன்னு கூட்டணியில் உள்ளவங்க பெயர் எல்லாம் சொல்லுறீங்க.. ஓபிஎஸ் அண்ணே பெயரை சொல்லவில்லையே என்று கேட்டனர்.

தென்னரசு
இதை கேட்டு.. சரி சரி சொல்கிறேன் என்று கூறிவிட்டு தென்னரசு அங்கிருந்து நைசாக கிளம்பினார். ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக தரப்பு தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் ஓ பன்னீர்செல்வம் வெளியே வராமல் வீட்டிற்கு உள்ளேயே முடங்கி உள்ளார். இரட்டை இலைக்காக பிரச்சாரம் செய்வேன் என்று கூறிய ஓ பன்னீர்செல்வம், பிரச்சாரம் செய்யும் மனநிலையில் இல்லை என்று கூறப்படுகிறது. அதாவது நான் தென்னரசுவிற்கு பிரச்சாரம் செய்ய மாட்டேன். ஆனால் இரட்டை இலைக்கு பிரச்சாரம் செய்வேன் என்று ஓ பன்னீர்செல்வம் கூறி இருந்தார். தான் இன்னும் அதிமுகதான் என்பதை நிரூபிப்பதற்காக ஓ பன்னீர்செல்வம் இந்த திட்டத்தை போட்டதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது களத்திற்கு செல்ல விருப்பம் இல்லாததால் இதுவரை அவர் பிரச்சாரம் எதையும் செய்யவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications