குக்கர் வெடித்ததில் பரவிய கேஸ்..அடுப்பை பற்ற வைக்க முயன்ற மூதாட்டி தீப்பிடித்து பலி..ஈரோட்டில் சோகம்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே சமையலறையில் கேஸ் அடுப்பு பற்ற வைக்கும் போது உடல் முழுவதும் தீப்பிடித்து மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேஸ் அடுப்பில் குக்கரை வைத்து அரிசியை போட்டுவிட்டு வழக்கம் போல் மற்ற வேலைகளை மூதாட்டி சுப்புலட்சுமி பார்த்து வந்துள்ளார். அப்போது திடீரென குக்கர் வெடித்து சிதறியுள்ளது. குக்கர் வெடித்து சிதறியதில் கேஸ் அடுப்பும் அணைந்து அதில் இருந்து எரிவாயு அறை முழுவதும் பரவியுள்ளது.
இதை அறியாத மூதாட்டி சுப்புலட்சுமி மீண்டும் கேஸ் அடுப்பை பற்ற வைக்க முயன்றதால் அறையில் பரவியிருந்த எரிவாயுவினால் உடலில் தீப்பிடித்து பலியாகியுள்ளார்.

வெடித்து சிதறிய குக்கர்
ஈராடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையம் அருகே சாணார்பதி என்ற இடம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமி என்ற மூதாட்டி அங்கு பெட்டிக்கடையை நடத்தி வருகிறார். மூதாட்டி சுப்புலட்சுமியுடன் நடக்க முடியாத ஒரு மகன் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தனக்கு தேவையான உணவுகளை தானே சமைத்துக்கொள்ளும் மூதாட்டி சுப்புலட்சுமி இன்று வழக்கம் போல் தனது வீட்டில் வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது அடுப்பில் குக்கரில் அரிசி போட்டு வைத்து விட்டு பிற வேலைகளை செய்துள்ளார். தீடிரென அடுப்பில் இருந்த குக்கர் வெடித்து சிதறியது.

மீண்டும் கேஸ் அடுப்பை பற்ற வைத்த மூதாட்டி
சமையல் அறை முழுவது குக்கரில் இருந்த சாதம் விழுந்து சிதறியது. சமையல் அறையில் குக்கர் வெடித்த சத்தம் கேட்டதும் பதறிப்போன சுப்புலட்சுமி வேகமாக வந்து சமையல் அறைக்கு வந்துள்ளார். அப்போது குக்கர் வெடித்து சிதறியதால் எரிவாயு அடுப்பும் அணைந்து இருந்துள்ளது. குக்கர் வெடித்து சிதறியதால் அடுப்பு அணைந்துவிட்டதாக கருதி மீண்டும் சமையல் கேஸ் அடுப்பை பற்ற வைக்க முயற்சித்துள்ளார்.

அலறி துடித்த மூதாட்டி
ஆனால், எரிவாயு கசிந்தது அறை முழுக்க எரிவாயு பரவியிருப்பதை மூதாட்டி கவனிக்கவில்லை. இதனால், அடுப்பை பற்ற வைக்க முயன்றதும் குப்பென்று பரவிய தீ அறை முழுக்க பற்றியுள்ளது. சமையல் அறையில் இருந்த மூதாட்டி சுப்புலட்சுமியின் சேலையில் தீ பிடித்தது. சேலையில் பிடித்த தீ சுதாரிப்பதற்குள் உடல் முழுவதும் பரவியது. இதனால், மூதாட்டி அலறி துடித்துள்ளர். மேலும் கத்தி கூச்சல் இட்டுள்ளார்.

உடல் முழுவதும் தீப்பிடித்தது
மூதாட்டியின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்து வீட்டினர். என்னமோ ஏதோ என்று பதறியடித்து வீட்டிற்கு வந்து பார்த்து உள்ளனர். அப்போது உடல் முழுவதும் தீ பிடித்த நிலையில், சுப்புலட்சுமி அலறி துடித்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். இதையடுத்து அவர்கள் உடனே தீயை அணைக்கும் முயற்சியாக தண்ணீரை ஊற்றியிருக்கின்றனர். தீ அணைந்தபிறகு சுப்புலட்சுமியை கவனித்த போது அவர் தீ பிடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விசாரணை
முன்னதாக வீட்டில் நடக்க முடியாத சூழலிலும் தவழ்ந்து தவழ்ந்து சென்று அவரது மகன் சுப்புலட்சுமியை காப்பாற்ற முயன்றது அங்கிருந்தவர்கள் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது கண் முன்னே தாய் சுப்புலட்சுமி தீப்பிடித்து சரிந்து விழுந்துள்ளார். இதற்கிடையே தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சுப்புலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமையல் எரிவாயு கசிந்து தீப்பிடித்ததில் மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications