அடி மேல் அடி.. சமாதானம் செய்ய முயன்ற ஓபிஎஸ்.. தட்டித் தூக்கிய எடப்பாடி.. கூடாரம் மொத்தமா காலி?
ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமி அணிக்குத் தாவியுள்ளதால் ஈரோடு மாவட்டத்தில் ஓபிஎஸ் கூடாரம் காலியாகியுள்ளது.
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த நிலையில், இன்று எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்துள்ளனர். ஓபிஎஸ் அணியின் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளராக இருந்த முருகானந்தம், ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் தங்கராஜ் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தனர்.
ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 106 நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்து ஓபிஎஸ் அணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்த முருகானந்தம், அதிமுக தொண்டர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி பின்னால்தான் உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
இருந்து பழனிசாமி அணிக்கு மாற உள்ளதாக முருகானந்தம் தகவல் தெரிவித்திருக்கிறார்.

இடைத்தேர்தல் களேபரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. முன்னதாக, அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் கே.எஸ்.தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். செந்தில் முருகன் வேட்புமனுவும் தாக்கல் செய்தார். இதனிடையே அதிமுக வேட்பாளரை பொதுக்குழு தேர்வு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில், ஈபிஎஸ் அணியின் தென்னரசு வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஓபிஎஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெற்றார்.

கூண்டோடு ராஜினாமா
இந்நிலையில் இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் முருகானந்தம் உட்பட 106 பேர் தங்கள் ராஜினாமா கடிதத்தை ஓபிஎஸ்ஸுக்கு அனுப்பினர். கட்சிக்கு தொடர்பில்லாத நபரை வேட்பாளராக அறிவித்து, அவரையும் திரும்பப் பெற்றதால் அதிருப்தியடைந்து இந்த முடிவை எடுத்துள்ளனர். மேலும், ஓபிஎஸ் அணிக்காக தங்கள் செலவிட்ட தொகையை தர மறுப்பதாகவும் குற்றம்சாட்டியதாக தகவல் வெளியானது.

பொறுப்புகள் மாற்றம்
முருகானந்தம் உள்ளிட்ட 106 பேர் விலகுவதாக முடிவெடுத்த நிலையில் அவர்களுடன் சமாதானம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அவர்கள் வகித்த பதவிகளை மாற்றி அறிவிப்பு வெளியிட்டார். ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் பொறுப்பில் முருகானந்தம், ஈரோடு மாநகர் மாவட்ட கழகச் செயலாளராக தங்கராஜ், எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளராக பாஸ்கரன் மற்றும் புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளராக ஜெயப்பிரகாஷ் ஆகியோரை நியமித்து ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டார்.

சமாதான முயற்சி பலனளிக்கவில்லை
ஓபிஎஸ்ஸின் சமாதான முயற்சியை ஏற்காத நிர்வாகிகள், இன்று எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்துள்ளனர். ஓபிஎஸ் அணியின் ஈரோடு மாவட்ட செயலாளராக இருந்த முருகானந்தம், ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் தங்கராஜ் உள்ளிட்டோர் ஈபிஎஸ் அணியில் இணைந்தனர். ஓபிஎஸ் அணியின் ஈரோடு மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் முருகன், வர்த்தக அணி செயலாளர் ராஜமாணிக்கம், ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையத்தைச் சேர்ந்த பகுதி செயலாளர் அர்த்தநாதீஸ்வரன் உள்ளிட்டோரும் அணி மாறியுள்ளனர்.

ஈபிஎஸ் சந்தித்து இணைந்தனர்
சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவரது அணியில் இணைந்துள்ளனர் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிய நிர்வாகிகள். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முருகானந்தம், ஈரோட்டில் உள்ள ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அனைவரும் விரைவில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு வருவார்கள். தற்போது விலகிய 106 நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாற உள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி பக்கம் தான் தொண்டர்கள் உள்ளனர். எடப்பாடி இரட்டை இலையை மீட்டெடுத்துள்ளார். எனவே எடப்பாடி பழனிசாமி கையில் தான் இனி அதிமுக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications