வாக்குவரம் சொல்லி காலில் சலங்கை கட்டி ஆடிய அதிமுக எம்எல்ஏ! கோவில் திருவிழாவில் பக்தர்கள் நெகிழ்ச்சி!
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், கோவில் திருவிழாவில் காலில் சலங்கை கட்டி ஆடியது பக்தர்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது.
கொங்குமண்டலத்தில் பிரசித்தி பெற்ற வாக்குவரம் சொல்லும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் சலங்கை கட்டி ஆடியிருக்கிறார்.
கோவில் திருவிழாக்களில் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் ஆடி பாடி மகிழும் நிகழ்வுகளை கடந்த சில ஆண்டுகளாக அதிகம் காண முடிகின்றன

ஈரோடு மாவட்டம்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சிறுகளஞ்சி கிராமத்தில் சின்ன மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். கொங்குமண்டலத்தில் பிரசித்தி பெற்ற வாக்குவரம் சொல்லும் நிகழ்ச்சியும் அந்தக் கோவிலில் நடைபெறும். இதில் பல ஆண்டுகளாக கலந்துகொண்டு வாக்குவரம் சொல்லி வரும் அதிமுக எம்.எல்.ஏ.ஜெயக்குமார், இந்தாண்டும் கலந்துகொண்டார்.

காலில் சலங்கை
அப்போது எப்போதும் போல் காலில் சலங்கையை கட்டிக் கொண்டு ஆடத் தொடங்கிய அதிமுக எம்.எல்.ஏ. வாக்குவரமும் சொன்னார். இதனைக் கண்டம் பக்தர்களும், சிறுகளஞ்சி கிராம இளைஞர்களும் நெகிழ்ச்சி அடைந்தனர். எம்.எல்.ஏ. பதவியில் இருந்தாலும் கூட இன்னும் பழசை மறக்காமல் இயல்பாக இருப்பதாக அவரை புகழ்ந்தனர்.

அமைச்சர் நடனம்
அண்மைக்காலமாக கோவில் திருவிழாக்களில் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் ஆடி பாடி மகிழும் நிகழ்வுகளை அதிகம் காண முடிகிறது. மூன்று நாட்களுக்கு முன்னர் கூட ஒட்டன்சத்திரம் அருகே நடைபெற்ற காளியம்மன் கோவில் திருவிழாவில் கலந்துகொண்ட அமைச்சர் சக்கரபாணி, கிராமத்தினருடன் சேர்ந்து தேவராட்டம் ஆடி மகிழ்ந்தார்.

கோவில் திருவிழா
இதேபோல் கோவை மாவட்டத்தில் எதிர்க்கட்சி கொறடாவும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கோவில் திருவிழாக்களில் கலந்துகொள்ளும் போது பல்வேறு தருணங்களில் உள்ளூர்காரர்களுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இது போன்ற காட்சிகளை யாரும் கண்டிருக்கவும் முடியாது, கேட்டிருக்கவும் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
Sengottaiyan: செங்கோட்டையன் எம்எல்ஏ பதவிக்கு சிக்கல்? ஹைகோர்ட்டில் அதிமுக வேட்பாளர் வழக்கு! -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்! -
அதிமுக என்னும் மாபெரும் மதில் இடியும் போதும்.. மௌனம் காக்கும் எடப்பாடி.. ஒரு வார்த்தை பேசலையாமே! -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications