பாலியல் டாக்டர் தந்த மாத்திரை.. எந்நேரமும் "டார்ச்சர்".. துடிதுடித்த மனைவி.. கடைசியில் நடந்த சம்பவம்
கணவனை விஷம் வைத்து கொன்ற மனைவி கைதானார்
ஈரோடு: பாலியல் டாக்டர் தந்த மாத்திரையால் பெரிய பயங்கரமே நடந்துவிட்டது.. ராத்திரி, பகல் என பார்க்காமல் எந்நேரமும் புது மனைவிக்கு டார்ச்சர் செய்ய ஆரம்பித்துள்ளார் கணவர்.. கடைசியில் மனைவி செய்த காரியம் இருக்கே.. அப்படியே அரண்டு போய்விட்டது அந்தியூர் பகுதி..!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் காலனி மைக்கேல் பாளையம் சாலை தோட்டத்தை சேரந்தவர் நந்தகுமார்.. இவருக்கு 35 வயசாகிறது. இவருக்கு சொந்தமாக 3 ஏக்கர் நிலம் உள்ளது.. எனினும் ஒரு மாவு மில்லிலில் வேலை பார்த்து வந்தார்.
ஆனால், கல்யாணம் ஆகவில்லை.. 35 வயதாகிவிட்டதால் பெண் கொடுக்கவும் யாரும் முன்வரவில்லை.. எனினும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தார்.. அப்போதுதான் மைதிலி என்ற பெண் கிடைத்தார்-.. 7 மாசத்துக்கு முன்பு மைதிலியை கல்யாணமும் செய்து கொண்டார்.

உயிரிப்பு
இந்நிலையில், திடீரென வயிற்று வலி என்று நந்தகுமார் ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டார்.. என்ன ஆச்சு என்று டாக்டர்கள் கேட்கவும், தான் சாப்பிட்ட சாப்பாடு கசப்பாக இருந்தாகவும், ஏதோ பூச்சிமருந்து வாசனை வந்ததாகவும் சொன்னார்.. இதையடுத்து டாக்டர்கள் அவரக்கு தீவிரமான சிகிச்சை தந்தனர்.. ஆனாலும் நந்தகுமார் இறந்துவிட்டார்.. அவரை காப்பாற்ற முடியவில்லை.

சந்தேகம்
இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விசாரணை ஆரம்பமானது.. ஒருவேளை நந்தகுமாரை யாராவது விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது.. அப்போதுதான் மைதிலி மீது சந்தேகம் வலுத்தது.. அவரை மடக்கி விசாரித்தபோது மொத்த உண்மையையும் சொல்லி விட்டார்.

மைதிலி
மைலிக்கு 15 வயதில் ஒரு கல்யாணம் ஆகி உள்ளது.. ஆனால், கணவரை பிரிந்துவிட்டார்.. இதன்பிறகுதான் நந்தகுமாரை 2வதாக மைதிலி கல்யாணம் செய்துள்ளார்..மைதிலிக்கு 20 வயசுதான் ஆகிறதாம். நந்தகுமாருக்கு 35 வயசாகிறது... 15 வருஷம் இவர்களுக்குள் வயது வித்தியாசம் இருந்துள்ளது.. இது மைதிலிக்கு ஒரு பிரச்சனையாகவே இருந்துள்ளது.. தாம்பத்தியத்திற்கு இடையூறாகவும் இந்த வயது பிரச்சனை இருந்திருக்கிறது..

அவதி
ஏற்கனவே 35 வயசு வரை கல்யாணம் ஆகாமல் தவித்த நந்தகுமார், மனைவி உறவுக்கு ஒத்துழைக்க மறுத்ததும், மேலும் நொந்து போய்விட்டார்.. அதனால், ஒருபாலியல் டாக்டரை சந்தித்துள்ளார் நந்தகுமார்.. அந்த டாக்டர் ஏதோ மாத்திரை தந்துள்ளார்.. அந்த மாத்திரையை மைதிலி சாப்பிட்ட பிறகு கர்ப்பமானாராம். ஆனால், இதற்கு பிறகுதான் பிரச்சனையே ஆரம்பமாகி உள்ளது.. மாத்திரை கையில் கிடைத்ததும், நந்தகுமார் மைதிலியை எந்நேரமும் பாலியல் தொல்லை செய்து வந்துள்ளார்.. ராத்திரி, பகல் என டார்ச்சர் தரவும் எரிச்சலாகிவிட்டார் கர்ப்பிணி மைதிலி..

பூச்சி கொல்லி மருந்து
அதனால்தான், சாப்பிட்டில் விஷம் தந்து, ஆளையே க்ளோஸ் பண்ணிவிடலம் என்று முடிவெடுத்துள்ளார்.. சம்பவத்தன்று, வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை சாப்பாட்டில் கலந்து நந்தகுமாருக்கு தந்துள்ளார்.. அதுமட்டுமல்ல, ஒருவேளை அப்படி விஷ சாப்பாடு சாப்பிட்டும் நந்தகுமார் உயிர் போகவில்லையானால், என்ன செய்வதென்று யோசித்து, மதியம் சாப்பாட்டுக்கு கட்டி தந்த உணவிலும், விஷத்தை கலந்து தந்துள்ளார்.

விஷம்
அதனால், காலையில் சாப்பிட்ட விஷம், டிபன் பாக்ஸில் மதியம் சாப்பிட்ட விஷம் என மொத்தமாக நந்தகுமார் உடம்பில் கலந்துள்ளது.. அதனால்தான் சிகிச்சை எவ்வளவோ தந்தும் காப்பாற்ற முடியவில்லை.. இப்போது கர்ப்பிணி மைதிலி கைதாகி ஜெயிலுக்குள் இருக்கிறாராம்..!
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications