அதிரவைத்த ‘கருமுட்டை’ விற்பனை..! மருத்துவமனைகளில் கிடுக்குப்பிடி விசாரணை! சிக்கப்போகும் புள்ளிகள்?
ஈரோடு : ஈரோட்டில் சிறுமியிடம் கருமுட்டைகளை எடுத்து விற்பனை செய்தது தொடர்பாக, சுகாதாரத்துறையின் உயர்மட்ட மருத்துவக்குழுவினர் மற்றும் காவல்துறையினர் தனியார் மருத்துவமனைகளில் சி தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மேலும் பலர் சிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பாடுகிறது.
Recommended Video
ஈரோட்டில் போலி ஆவணம் தயாரித்து, 16 வயது மகளின் கருமுட்டைகளை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்த தாய் சுமையா, அவரது இரண்டாவது கணவர் சையது அலி, இடைத்தரகர் மாலதி ஆகியோர் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் சிறுமியின் வயதை அதிகப்படுத்தி காட்டும் வகையில், போலியாக ஆதார் தயாரித்து கொடுத்த ஜான் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருமுட்டை விற்பனை
இதுதொடர்பாக ஈரோடு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கனகேஸ்வரி தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், சிறுமியை கட்டாயப்படுத்தி ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் தனியார் மருத்துவமனைகளுக்கு கருமுட்டைகள் விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

தீவிர விசாரணை
கருமுட்டைகளை விலை கொடுத்து வாங்கிய ஈரோடு மற்றும் பெருந்துறையில் செயல்படும் 2 மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பிய போலீஸார், அவர்களை ஏடிஎஸ்பி அலுவலகத்துக்கு அழைத்து நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சுகாதாரத் துறைசார்பில் மருத்துவர்கள் அடங்கியஉயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சோதனை
இக்குழுவைச் சேர்ந்த மருத்துவர்கள் நேற்று ஈரோடு மற்றும் பெருந்துறையில் செயல்படும் 2 தனியார் மருத்துவமனைகளில் விசாரணை மேற்கொண்டனர். ஈரோடு அரசுகாப்பகத்தில் இருக்கும் பாதிக்கப்பட்ட சிறுமியிடமும் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து உயர்மட்ட மருத்துவக் குழுவினர் கூறும்போது, ‘பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நடந்தவை குறித்து கேட்டறிந்தோம். அவர் நலமாக உள்ளார். குற்றச்சாட்டுக்குள்ளான 2 மருத்துவமனைகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பலர் சிக்க வாய்ப்பு
இதுகுறித்து அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளோம். அதன் அடிப்படையில் மருத்துவமனை நிர்வாகங்கள் தவறு செய்திருந்தால், அதன் உரிமம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது என்றனர். இதனிடையே சிறுமியின் கருமுட்டையை வாங்கி விற்பனை செய்த மருத்துவமனைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகளும் தயாராகி வருகின்றனர் மேலும் கருமுட்டையை வாங்கியவர்கள் யார்? என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக மேலும் பல சிக்கல் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications