ஹாஸ்பிடலில் அப்பா! ஈவிகேஎஸ் இளங்கோவன் இடத்தில் இளைய மகன்! ஈரோட்டில் முகாமிட்டுள்ள சஞ்சய் சம்பத்!
ஈரோடு: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வரும் நிலையில் அவரது பிரதிநிதியாக ஈரோட்டில் முகாமிட்டு கட்சிப் பணிகளையும், தனது தந்தையின் மக்கள் பணிகளையும் கவனித்து வருகிறார் சஞ்சய் சம்பத்.
இதற்கு காரணம் தனது தந்தையை நம்பி வாக்களித்த மக்களுக்கும், கட்சிக்காரர்களுக்கும் சோர்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே சஞ்சய் சம்பத்தின் எண்ணமாகும்.
இன்று கூட ஈரோட்டிலிருந்து கேரள மாநிலம் வைக்கம் நோக்கி புறப்பட்ட வாகன பேரணியை கே.எஸ்.அழகிரியோடு சேர்ந்து சஞ்சய் சம்பத் தொடங்கி வைத்தார்.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பு காரணமாக காலமானார். இதையடுத்து ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் எதிர்பாராத ட்விஸ்டாக காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டிட்டு வெற்றியும் பெற்றார்.

மருத்துவமனையில் இளங்கோவன்
இவரது வெற்றிக்காக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்த திமுகவும் ஈரோடு கிழக்கில் முகாமிட்டு கடுமையாக உழைத்தது. இதனிடையே வெற்றி கொடுத்த மகிழ்ச்சி 15 நாட்கள் கூட நீடிக்கவில்லை. நெஞ்சு வலியாக அனுமதிக்கப்பட்ட இளங்கோவனுக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டது. இப்போது கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டதாக கூறப்பட்டாலும் இன்னும் இளங்கோவன் மருத்துவமனையில் தான் இருந்து வருகிறார்.

ஈரோட்டில் சஞ்சய் சம்பத்
ஒரு வேளை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் அவரால் உடனடியாக களத்திற்கு செல்ல முடியாது என்பது யதார்த்தம். இந்தச் சூழலில் அவரது பிரதிநிதியாக ஈரோட்டில் முகாமிட்டு கட்சிப் பணிகளையும், தனது தந்தையின் மக்கள் பணிகளையும் கவனித்து வருகிறார் சஞ்சய் சம்பத். இதற்கு காரணம் தனது தந்தையை நம்பி வாக்களித்த மக்களுக்கும், கட்சிக்காரர்களுக்கும் சோர்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே சஞ்சய் சம்பத்தின் எண்ணமாகும்.

போட்டியிட்டிருக்கலாம்
இதற்கு பேசாமல் சஞ்சய் சம்பத்தே ஈரோடு கிழக்கில் போட்டியிட்டிருக்கலாம். ஏனோ அதில் அவர் ஆர்வம் காட்டவில்லை, இளங்கோவனும் அதை வலியுறுத்தவில்லை. இதனிடையே இன்று கூட ஈரோட்டிலிருந்து கேரள மாநிலம் வைக்கம் நோக்கி புறப்பட்ட காங்கிரஸ் கட்சியின் வாகன பேரணியை கே.எஸ்.அழகிரியோடு சேர்ந்து சஞ்சய் சம்பத் தொடங்கி வைத்தார்.












Click it and Unblock the Notifications