14 ஆம்புலன்ஸ்கள், 58 மருத்துவர்கள்.. விஜய் ஈரோடு பரப்புரைக்கு மாஸ் ஏற்பாடு! செங்கோட்டையன் அப்டேட்
ஈரோடு: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நாளை ஈரோட்டில் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். இந்நிலையில் பிரச்சாரத்திற்கு செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் என்ன என்பது குறித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியிருக்கிறார்.
கூட்டத்தில் பங்கேற்கும் தொண்டர்களின் பாதுகாப்புக்காக 14 ஆம்புலன்ஸ், 58 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்றும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது எனவும் கூறியுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது, "ஈரோடு மாவட்டத்தில் விஜயமங்கலத்தில், விஜய் சிறப்புரை ஆற்ற இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் பிரமாணமாக செய்யப்பட்டிருக்கிறது. இந்த கடுமையான பணியை மூன்றே நாட்களுக்குள் முடித்திருக்கிறோம். காவல்துறை கண்காணிப்பாளர் பரப்புரை நடக்கும் இடத்தை பார்வையிட்டு சென்றிருக்கிறார். அவர் என்னென்ன பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரோ, அத்தனை பணிகளையும் நிறைவேற்றி, தேவையான வசிகளை கூடுதலாக வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
14 ஆம்புலன்ஸ், ஏறத்தாழ 58 மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவசர சிகிச்சைக்காக தனியாக அங்கங்கே முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அங்கு சிகிச்சை பெறுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. குடிநீரை பொறுத்தவரையிலும் தேவையான அளவிற்கு குடிநீர் வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இன்னும் கூடுதலாக 10 லாரிகளில் தண்ணீரை கொண்டு வந்து, ஆங்காங்கே வருகின்றவர்களுக்கும் அந்த குடிநீரை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
5 ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. 60 கேமராக்கள் இன்னும் ஒரு மணி நேரத்தில் பொருத்தப்படும். அதுமட்டுமல்ல வருகின்றவர்களுக்கு என்ன தேவையோ அந்த தேவைகளை நிறைவு செய்கின்ற வகையில் அனைத்து பணிகளும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பத்திரிக்கையாளருக்கு தனியாகவே அமர்வதற்கு இடம் வழங்கி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு! -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
தமிழ்நாடு விஷம் குடித்து இருக்கிறது.. மக்கள் புரிந்து கொள்வார்கள்! தேர்தல் முடிவு பற்றி சுகி சிவம் பரபர பேச்சு -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
தமிழக சட்டசபை 18 ஆம் தேதி கூடுகிறது.. “தமிழ்த்தாய் வாழ்த்து” பற்றி சஸ்பென்ஸ் வைத்த சபாநாயகர்! -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
ஒவ்வொரு அமைச்சருக்கும் டார்கெட் நிர்ணயித்த முதல்வர் விஜய்.. கேபினட் மீட்டிங் பற்றி நிர்மல் விளக்கம்! -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு?











Click it and Unblock the Notifications