எங்க தலைவர் மட்டும் தான் துண்டு சீட்டு வச்சு பேசுகிறாரா? – கடுப்பான செங்கோட்டையன்
ஈரோடு: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. விஜய் ஸ்க்ரிப்ட் எழுதி வைத்து பேசுகிறார் என்பது விமர்சனமாகியுள்ளது. இதுகுறித்து விமர்சனத்துக்கு செங்கோட்டையன் மற்ற தலைவர்களுடன் ஒப்பிட்டு பரபரப்பு விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக -பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டுகிறார்கள். 4 முனைப் போட்டியால் தமிழ்நாட்டில் பரபரப்பு நிலவி வருகிறது [Sengottaiyan].

விஜய் ஸ்க்ரிப்ட்
விஜய்யின் வருகை அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. மிகவும் அரிதாக தலை காட்டும் விஜய் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். விஜய் அரசியல் கூட்டங்களில் எழுதி வைத்து, ஸ்கிரிப்டடாக பேசுகிறார் என்பது விமர்சனமாகியுள்ளது. அவரின் ஸ்க்ரிப்ட் பேப்பர் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலானது.
தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஈரோட்டில் செய்தியாயளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் தவெக வெற்றி பெறுவார். எங்கள் வெற்றி தளபதி தான் தமிழ்நாட்டை ஆளப் போகிறார் என்ற காலம் வந்துவந்துவிட்டது. இந்த வெற்றி வரலாற்றை படைக்கின்ற வகையில் இந்த செயல் வீரர் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எல்லாருமே அப்படிதான்
இதற்கு ஏற்பாடுகள் செய்த மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோரை பாராட்டுகிறேன். கட்சி ராணுவக் கட்டுப்பாட்டுடன் உள்ளது. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு பெரிய விஐபி அவர் திமுக, அதிமுக 2 கட்சிகளுடன் நட்பில் இருக்கிறார். ஆனால் அவர் தவெக வர விருப்பம் தெரிவித்துள்ளார். அவரின் பெயரை அப்போது சொல்ல முடியாது.
தமிழகத்தை ஆளப் போவர் எங்கள் தலைவர் தான். 2026 தேசிய கொடியை ஏற்றி எங்கள் வெற்றி தளபதி வீறு நடை போடுவார். எந்த தலைவர் எழுதி வைத்து படித்து பேசுவதில்லை. திமுக தலைவர், பிரதமர் உள்ளிட்ட எல்லோருமே எழுதி வைத்துத்தான் பேசுகிறார்கள். எழுதி வைத்து எந்த அரசியல் கட்சி தலைவர் பேசுவதில்லை என்று சொல்லுங்கள்.
சீறிப்பாய்வார்கள்..
பிறகு நான் அதற்கு பதில் சொல்கிறேன். தவெக கூட்டணி மற்றும் வேட்பாளர்கள் அறிவிப்பை எங்கள் தலைவர் விரைவில் வெளியிடுவார். தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தவெக கூட்டணி அமையும். திமுகவினர் பணம், அதிகார பலம் எதை கொண்டு வந்தாலும் தவெகவினர் சிங்க குட்டிகள் சீறிப்பாய்வார்கள். எங்களின் வெற்றி நிச்சயம்" என்றார்.
-
காணொலி விசாரணைக்கு நோ சொன்ன நீதிமன்றம்! முதல்வர் விஜய்-சங்கீதா நேரில் ஆஜராகனும்! விசாரணை ஒத்திவைப்பு -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
பொண்ணு கிடைச்சாலும்.. புதன் கிடைக்காது! அரசியல் என்ட்ரி கொடுக்கும் ராகவா லாரன்ஸ்! தவெகவில் ஐக்கியம்? -
அடித்து தூக்கும் விஜய்.. நில ஒதுக்கீட்டில் ராக்கெட் வேகம்.. லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
அடுத்த 20 ஆண்டுகளுக்கு விஜய் தான் முதல்வர்.. தமிழ்நாட்டில் தவெக ஆட்சி மட்டும்தான்.. அமைச்சர் ஆனந்த்! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர்












Click it and Unblock the Notifications