ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா மரணம்.. கதறி அழுத சுப்புலட்சுமி ஜெகதீசன்
ஈரோடு: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா எம்எல்ஏ மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில் அவரது உடலை பார்த்து சுப்புலட்சுமி ஜெகதீசன் கதறி அழுத காட்சிகள் பார்ப்போர் மனதை உலுக்கியது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் இரண்டாவது மகன் திருமகன். இவர் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். தமிழகக் காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகம் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இவர் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளராகவும் செயல்பட்டு வந்தார்.
ஈவிகேஎஸ் இளங்கோவனின் பேத்தியும் திருமகனின் மகளுமான சமணா கடந்த நவம்பர் மாதம் நடந்த குதிரையேற்ற போட்டியில் இந்திய அளவில் முதலிடம் பெற்று ஜூனியர் சாம்பியன் கோப்பையை பெற்றார். இதையடுத்து அவர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது முதல்வரை திருமகனும் சந்தித்திருந்தார்.

தமிழக சட்டசபை தேர்தல்
திருமகன் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் முதல்முறையாக களமிறங்கி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினரானார். தொகுதி பணிகளிலும் சட்டசபை நிகழ்வுகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்றார். பெரியாரின் பிறந்த நாள் சமூக நீதி நாளாக முதல்வர் அறிவித்தபோது சட்டசபையில் தனது கன்னி பேச்சின் மூலம் நன்றி தெரிவித்தார் திருமகன்.

திருமகனுக்கு உடல்நல குறைவு
இந்த நிலையில் நேற்று முன் தினம் திருமகனுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஈரோட்டில் உள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனையில் னுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு இன்றைய தினம் மரணமடைந்தார். இதையடுத்து திருமகனின் உடல் ஈரோடு கச்சேரி சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

கட்சியினர் அஞ்சலி
திருமகனின் உடலுக்கு அதிமுக, பாஜக, திமுக, காங்கிரஸ் கட்சியினர் திரளாக வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். கட்சி பேதமில்லாமல் இளங்கோவனுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். 46 வயதில் திருமகன் இறந்த செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளங்கோவன் குடும்பத்தினர் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவே இல்லை.

சுப்புலட்சுமி ஜெகதீசன்
இந்த நிலையில் ஈரோட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திமுகவிலிருந்தும் அரசியலில் இருந்தும் விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன் அஞ்சலி செலுத்தினார். திருமகன் முகத்தை பார்த்தவுடன் கதறி அழுதார். நீண்ட நேரமாக அங்கே நின்று கொண்டு அவர் அழுதது அனைவரின் மனதையும் உலுக்கியது. இளங்கோவனும் சுப்புலட்சுமியும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

அரசியல் ரீதியாக
இருவருக்குள்ளும் அரசியல் ரீதியாக நட்புறவும் சகோதரத்துவமும் இருந்தது வந்தது. ஒரே ஊர்காரர்கள் என்பதால் தன் கண்ணெதிரே பார்த்து வளர்ந்த திருமகன் இத்தனை சிறிய வயதில் மரணமடைந்தது சுப்புலட்சுமியால் தாங்க முடியவில்லை. திருமகன் பெரியாரின் பெயரன். சுப்புலட்சுமி ஜெகதீசன் பெரியாரிஸ்ட், பெரியார் கொள்கைகளில் பற்று கொண்டிருப்பவர். அந்த முறையிலும் இளங்கோவன் குடும்பத்திற்கு சுப்புலட்சுமி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். இளங்கோவனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியாமல் அஞ்சலி செலுத்த வந்தவர்கள் தவிக்கிறார்கள். திருமகனின் மகள் சமணா அப்பா அப்பா என கதறி அழும் காட்சி பார்ப்போர் மனதை கலங்கச் செய்கிறது.
-
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு -
"முதல்ல பணத்தை எடுத்து வை.." ஹார்முஸை கடக்க சுங்க கட்டணம்.. மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய ஈரான் -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
சவால் விட்ட செங்கோட்டையன் அதிர்ச்சி.. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரே இல்லாததால் கடும் அப்செட்! -
சரியான நேரத்தில் எச்சரித்த ஆனந்த் சீனிவாசன்... சட்டென எகிறிய தங்கம் விலை.. இனி என்ன நடக்கும்? -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
உன்னை கட்சியில் வைத்திருந்தால்.. அதிமுகவையே விற்றுருப்பாய்.. ஓபிஎஸ்ஸை தரக்குறைவாக பேசிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications