இடைத்தேர்தல் நடக்கும் ஈரோட்டில் தகிக்கும் வெப்பம்..101 டிகிரி ஃபரான்ஹீட் பதிவு
தமிழ்நாட்டில் பல ஊர்களில் வெப்பம் தகிக்கிறது. இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோட்டில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
ஈரோடு: அதிகாலையில் குளிர் காற்று வீசினாலும் காலை 8 மணி முதலே சூரிய பகவான் தனது கதிர்வீச்சுக்களால் சுட்டெரிக்கத் தொடங்கி விடுகிறார். வெப்பத்தின் கொடுமை மாசி மாதமே தொடங்கி விட்டது. அனல் காற்றின் வேகத்தை தாக்கு பிடிக்க மக்கள் பழச்சாறு, தர்பூசணி உள்ளிட்ட குளிர்பானங்களை நாடத் தொடங்கி விட்டனர். இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோட்டில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சித்திரை மாதத்தின் இறுதியில் அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிவிடும். மே 4ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை அக்னி நட்சத்திர காலமாகும். அந்த கால கட்டத்தில் அனல் காற்று வீசும். இந்த ஆண்டு பருவமழைகள் அபரிமிதமாக பெய்தாலும் குளிரும் அதிகமாகவே இருந்தது. பனியின் தாக்கத்தினால் கடந்த சில வாரங்களாகவே இருந்தது.

தமிழ்நாட்டில் நிலவும் வறண்ட வானிலையால் வெப்பம் தகிக்கிறது. பல ஊர்களில் 95 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் பதிவாகியுள்ளது. குறிப்பாக ஈரோட்டில் 101 டிகிரி ஃபரான்ஹீட் வெப்பநிலை பதிவானது. கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
பிப்ரவரி மாதத்திலேயே வெயில் வாட்டி வதைப்பதால் ஏப்ரல் மே மாதங்களை எப்படி கடக்கப்போகிறோம் என்ற கலக்கம் ஏற்பட்டுள்ளது. வெயிலில் இரு தப்பிக்க பலரும் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இன்று இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாக்குசாவடிகளில் வாக்காளர்களுக்கு சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

அவசிய தேவைகளுக்காக தேவைகளுக்காக வெளியே வரும் மக்கள் சாலை ஓரம் மரத்தடி நிழலில் இளைப்பாறி தர்பூசணிப்பழம் சாப்பிட்டு, இளநீர், கரும்புச்சாறு, பழச்சாறு அருந்தி தாகத்தை தணிக்கின்றனர். வெயிலின் தாக்கத்தால் இப்போதே தர்பூசணி கடைகளில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. வெப்பத்தை சமாளிக்க அரசு சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications