“கருகுதே”.. வாயை விட்ட சீமான்! விடாமல் விரட்டியடிக்கும் அருந்ததியர் -ஈரோட்டிலும் உருவ பொம்மை எரிப்பு
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர்களை ஆந்திராவில் இருந்து மலம் அள்ள வந்தவர்கள் என்று பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் அவரது உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
ஈரோடு: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர்களை ஆந்திராவில் இருந்து மலம் அள்ள வந்தவர்கள் என்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்து இருக்கும் நிலையில், தென் மாவட்டங்களில் அவரது உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடைபெற்ற நிலையில் இன்று தேர்தல் நடைபெறும் ஈரோட்டிலேயே அவரது கொடும்பாவி எரிக்கப்பட்டு உள்ளது
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து நாம் தமிழர் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் அங்கு சென்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது ஆற்றிய உரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

சாதி பற்றி பேசிய சீமான்
அதில், "விஜயநகர மன்னர்கள் முதலியார்களிடம் பட்டாடை செய்து தரக் கேட்டார்கள். ஆனால் முதலியார்கள் வேறு ஆளை பார்த்துக் கொள்ளுங்கள் என்று மறுத்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் விஜயநகர மன்னர்கள் சவுராஷ்டிராக்களை குஜராத்தில் இருந்து இறக்கினார்கள்." என்றார். ஈரோடு கிழக்கில் பெரும்பான்மையாக வசிக்கும் சமூகம் செங்குந்த முதலியார்கள். நாம் தமிழர் வேட்பாளரும் அந்த சமூகத்தை சேர்ந்தவர்தான்.

அருந்ததியர்கள் வந்தேரிகளா
அதே மேடையில், "கடைசியாக இந்த நிலத்தில் என் ஆதி தமிழ் குடிகள் தூய்மை பணியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களிடம் எங்கள் ஆட்சியிலும் இதேபோல் தூய்மைப் பணியை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கேட்டபோது மறுத்துவிட்டார்கள். எனவே வேறு வழியில்லாமல் ஆதிக் குடிகளை கொண்டு வந்து இறக்கினார்கள். இங்கு வசிக்கும் அருந்ததியர்கள்தான் அவர்கள்." என்று பேசினார்.

கொந்தளித்த அருந்ததியர்கள்
அருந்ததியர்கள் குறித்த சீமானின் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. அருந்ததியர் அமைப்புகள் சீமான் தங்களை அவமதித்துவிட்டதாக குற்றம்சாட்டி உள்ளனர். நாம் தமிழர் கட்சியினர் ஈரோடு ராஜாஜிபுரத்தில் கடந்த 17 ஆம் தேதி வாக்கு சேகரிக்க சென்றபோது அருந்ததியின மக்கள் அவர்களை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.

ஓட்டு கேட்க ஏன் வருகிறீகள்?
அடுத்தடுத்த நாட்களிலும் ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினர் அருந்ததியின மக்கள் வசிக்கும் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அருந்ததியர்கள் மலம் அள்ளுபவர்கள் என்று சீமான் மேடையில் பேசுகிறார். நீங்கள் ஏன் அருந்ததியர் பகுதிக்கு வருகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பிய மக்கள், அருந்ததியர்களை ஆந்திராவிலிருந்து வந்தவர்கள் என்று சொன்ன சீமான் மன்னிப்பு கேட்காமல் உங்களால் ஓட்டு கேட்டு செல்ல முடியாது என்று கூறினர்.

உருவ பொம்மை எரிப்பு
இதற்கிடையே சீமானை கண்டித்து தமிழ் புலிகள் கட்சியினரும் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தேனியில் அவரது உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் தமிழ் புலிகள் கட்சியினர் ஈடுபட்டனர். இதையடுத்து 20 பேரை போலீசார் கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சீமானின் உருவ பொம்மையை எரித்து தமிழ் புலிகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோட்டிலும் போராட்டம்
அடுத்து மதுரை, இராமநாதபுரம், நாமக்கல், திருநெல்வேலி என பல்வேறு பகுதிகளில் தமிழ் புலிகள் கட்சியினர் சீமானின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று ஈரோட்டிலும் சீமானை கைது செய்யக்கோரி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் நாம் தமிழர் கட்சிக் கொடியும் சாய்க்கப்பட்டது. இதனால் அவர் பிரச்சாரத்தையே ரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஈரோட்டிலும் தமிழ் புலிகள் கட்சியினர் சீமான் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications