திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற.. அதிமுக வெற்றிபெற வேண்டும்.. அண்ணாமலை பிரச்சாரம்!
அதிமுக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு வெற்றிபெற்றால் மட்டும் திமுக அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதேபோல், மக்களை அடைத்து வைப்பதால் அதிமுகவின் வெற்றியை தடுக்க முடியாது என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, பிப்.27ம் தேதி அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பாக தென்னரசு, தேமுக சார்பாக ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அண்ணாமலை பிரச்சாரம்
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப்பதிவிற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் சூழலில், அனைத்து கட்சிகளின் பிரச்சாரமும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசை ஆதரித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்தின் போது அண்ணாமலை பேசுகையில், 30 திமுக அமைச்சர்களை எதிர்த்து தொண்டர்கள் களத்தில் பணியாற்றி வருகிறோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவை தமிழ்நாடே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.

இருண்ட காலம்
அதிமுக வேட்பாளர் மக்களை சந்திக்கக் கூடாது என்பதற்காக, திமுகவினர் மக்களை அடைத்து வைத்துள்ளார்கள். சீப்பை ஒழித்து வைத்துவிட்டால் திருமணம் நின்றுபோய்விடும் என்று பழமொழி சொல்வார்கள். ஆனால் வாக்காளர்கள் ஒழித்து வைப்பதால், அதிமுக - பாஜகவின் கூட்டணி வெற்றியை தடுக்க முடியாது. திமுக ஆட்சியமைத்த 22 மாதங்கள், தமிழ்நாட்டின் இருண்ட காலமாக மாறியுள்ளது. இதுவரை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000
ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.1,000 கொடுத்திருந்தால், தற்போது ரூ.22 ஆயிரம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. அதேபோல் கேஸ் சிலிண்டர் மானியம் இதுவரை அளிக்கப்படவில்லை. ஆனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஒரு குக்கர் மட்டும் வந்துள்ளது. சாராய அமைச்சர் விற்காத கொலுசையும், வாங்காத குக்கரையும் மட்டும் தான் கொண்டு வருவார். அந்த குக்கரை வீடுகளில் பயன்படுத்தினால், அது நிச்சயம் வெடித்துவிடும்.

22 மாத திமுக ஆட்சி
என்ன கொடுத்தாலும் பெற்றுக் கொண்டு ஓரமாக வைத்துவிட்டு, வாக்குகளை இரட்டை இலைக்கு அளிக்க வேண்டும். கடந்த பொதுத்தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தான் அதிமுக கூட்டணி வேட்பாளர் தோல்வியடைந்தார். 22 மாத ஆட்சியில் ஒரு நல்ல விஷயம் கூட நடக்கவில்லை. அதிமுக வேட்பாளர் வெற்றிபெற்றால் மட்டுமே, குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 மற்றும் கேஸ் மானியத்தை திமுக வழங்கும்.

திமுக கூட்டணி
திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் தங்களது கட்சிகளை அடமானம் வைத்துவிட்டார்கள். நேற்று கமல்ஹாசன் பிரச்சாரம் செய்வதை பார்த்துவிட்டு, அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டாரா என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மக்களிடம் வாக்கு கேட்பதற்கு மு.க.ஸ்டாலினுக்கோ, உதயநிதி ஸ்டாலினுக்கோ, கனிமொழிக்கோ எந்த தகுதியும் இல்லை என்று விமர்சித்தார்.
-
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications