டாஸ்மாக்கில் மது வாங்கினால் ‘ரசீது’: எல்லா இடத்திலும் விரைவில்! அமைச்சர் முத்துசாமி கொடுத்த அப்டேட்!
ஈரோடு: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபானம் வாங்குபவர்களுக்கு ரசீது வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின் போது 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மூடப்படும் என்று அறிவித்தார். அதன்படி 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறிந்து மூடப்பட்டது. அத்துடன் டாஸ்மாக்கில் படிப்படியாக மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி, "தமிழ்நாட்டில் அனுமதியில்லாமல் எந்த பார்களும் இயங்கவில்லை. அவ்வாறு இயங்குவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மது பாட்டில்களால் விவசாயிகளுக்கும், நடந்து செல்லும் பொதுமக்களுக்கும் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் டெட்ரோ பேக் மூலம் மதுவிற்பனை செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மற்ற மாநிலங்களிலும் டெட்ரா பேக் மது விற்பனை தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர். இதில், அரசியல் கட்சியினரும் கருத்து தெரிவித்துள்ளனர். தொழிற்சங்கத்தினருடனும், அதிகாரிகளுடனும் கருத்து கேட்டு வருகிறோம். டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு ரூ.5, ரூ.10 கூடுதலாக வாங்குவது 99% தடுக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு ரசீது கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ரசீது வழங்க ஏற்பாடு செய்யப்படும். இந்த திட்டம் நடைமுறைப்படுத்தும் போது அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் ஒரு எந்திரம் வழங்கப்பட்டு, மது வாங்குபவர்களுக்கு ரசீது வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதால், பில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. டாஸ்மாக் கடைகளில் எம்ஆர்பி விலைக்கே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதனை நிறைவேற்றும் வகையில், டாஸ்மாக் கடைகளில் 'பில்' வழங்கப்படும் என அமைச்சர் கூறியிருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது.

முன்னதாக, டாஸ்மாக் கடை தொடர்பாக நிறைய சீர்திருத்தங்கள் செய்ய வேண்டி உள்ளது. இந்த சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள ஒரு மாத கால அவகாசம் கேட்டுள்ளோம். டாஸ்மாக் கடைகளில் உள்ள சிக்கல்களை தீர்க்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டாஸ்மாக் தொடர்பாக தவறாக கருத்துகள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது. ஒரு மாத காலத்தில் டாஸ்மாக் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்திருந்தார்.
-
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
TASMAC: பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் ஏன்? யார் யாருக்கு லஞ்சம் போகிறது தெரியுமா? முழு லிஸ்டடால் ஷாக் -
டாஸ்மாக்: பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா! பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள்! விஜய் காதுக்கு வந்த செய்தி












Click it and Unblock the Notifications