என்னாது கிரிப்டோகரன்சியில் முதலீடா.. அதெல்லாம் பொய்.. தங்கமணி பரபரப்பு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: நான் கிரிப்டோகரன்சியில் எந்த முதலீட்டையும் செய்யவில்லை என முன்னாள் அமைச்சர் தங்கமணி மறுப்பு தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Raid-க்குப் பின் கொதித்து எழுந்த Thangamani | Oneindia Tamil

    வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு சொந்தமான இடங்களில் நேற்றைய தினம் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது.

    அவர் 4.85 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டை அடுத்து தங்கமணிக்கு சொநதமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டது.

    69 இடங்கள்

    69 இடங்கள்

    அது போல் சென்னையில் மட்டும் 14 இடங்களில் சோதனை நடந்தது. திமுக அரசு பொறுப்பேற்று லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தும் 5 ஆவது முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆவார். முன்னதாக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, சி விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது.

    முன்னாள் அமைச்சர்

    முன்னாள் அமைச்சர்

    இந்த நிலையில் தங்கமணியின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு அங்கிருந்து கணக்கில் வராத ரூ 2.16 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை கூறியிருந்தது. இந்த சோதனைக்கு பிறகு முன்னாள் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

    பழிவாங்கும் நடவடிக்கை

    பழிவாங்கும் நடவடிக்கை

    அப்போது அவர் கூறுகையில் அதிமுகவை அழிக்கும் நோக்கில் திமுக பழிவாங்கும் நோக்கில் இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் களங்கம் ஏற்படுத்தலாம் என முயற்சிக்கிறார்கள். அதிமுகவை அழிக்கலாம் என அவர்கள் நினைப்பது ஒரு நாளும் நடக்காது. என்னிடம் பணம் கைப்பற்றியதாக வெளியான தகவல் அனைத்து பொய்.

    செல்போன் மட்டுமே

    செல்போன் மட்டுமே

    என்னிடம் இருந்து வெறும் செல்போனை மட்டுமே லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அது போல் நான் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ததாகவும் அதற்கான கணினி ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் சொல்வது பொய்யான குற்றச்சாட்டாகும் என தங்கமணி தெரிவித்துள்ளார். தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணீதரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+