Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பாவ்லோவியன் தியரி".. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இதுதான் நடக்குமாம்.. இவர் இப்படி சொல்லிட்டாரே?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் என்ன நடக்கும் என்பது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் மணி பேட்டி அளித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இங்கே போட்டியிட உள்ளார். இந்த தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக முடிவு செய்துள்ளது.அதேபோல் ஓ பன்னீர்செல்வம் தரப்பு அதிமுகவும் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து இருக்கிறது. எதிர் தரப்பில் பாஜக போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. பாஜக தலைவர் அண்ணாமலையே, ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணியின் பவர் + பண பலம் இரண்டையும் சமாளிக்க வேண்டும் என்பதால், வலிமையான கட்சிதான் களமிறங்க வேண்டும். எங்கள் கூட்டணியில் வலிமையான கட்சி என்றால் அது அதிமுகதான் என்று சூசமாக தெரிவித்துள்ளார்.

இந்த இடைத்தேர்தலில் என்ன நடக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், தேர்தல் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு

அவர் அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளும் கட்சி அமைச்சர்கள் எல்லோரையும் களமிறக்குவதற்கும், எதிர்க்கட்சி நிர்வாகிகள் எல்லோரையும் களமிறக்குவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஆளும் கட்சி மொத்த பவரையும் களமிறக்குவதால் வேறு வழியின்றி எதிர்க்கட்சியும் களமிறங்குகிறது. திமுக, அதிமுக இரண்டும் ஆளும் கட்சியாக இருந்த போது இடைத்தேர்தலில் இதைத்தான் செய்து இருக்கிறது. ஜெயலலிதாதான் இடைத்தேர்தல்களில் இதை ஆரம்பித்து வைத்தார். அதை இப்போது திமுகவும் செய்கிறது. எம்ஜிஆர் - கருணாநிதி காலத்தில் இப்படி இல்லை. ஜெயலலிதா - கருணாநிதி காலத்தில்தான் இது தொடங்கியது.

ஜெயலலிதா

ஜெயலலிதா

2005ல் ஜெயலலிதா தொடங்கி வைத்த இடைத்தேர்தல் பார்முலா இப்போது உச்சம் தொட்டுள்ளது. இதுதான் 20 வருஷமாக நடக்கிறது. மக்களே பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்க தொடங்கிவிட்டனர். பாவ்லோவியன் தியரி என்று ஒன்று சொல்வார்கள். ஒரு விலங்கிற்கு தொடர்ந்து ஒரு நேரத்தில் உணவு வைத்தால் சரியாக அதே நேரத்தில் அந்த விலங்கிற்கு வாயில் எச்சில் ஊறும். அந்த நேரத்தில் தானாக அதற்கு எச்சில் ஊறும். இதுதான் அரசியலில் நடக்கிறது. மக்களுக்கு பணம் கொடுத்து கொடுத்து மக்கள் பணம் கேட்க தொடங்கிவிட்டனர். இதுதான் இடைத்தேர்தலில் நடக்கிறது.

ஜெயலலிதா

ஜெயலலிதா

2011ல் அதிமுக கூட்டணியில் இருந்த ஏற்காடு சிபிஎம் வேட்பாளர் பெருமாள் மரணம் அடைந்தார். இதையடுத்து நடந்த 2013 இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டது. கூட்டணியில் இருந்த சிபிஎம் கட்சிக்கு மீண்டும் இடம் கொடுக்காமல் அதிமுகவே போட்டியிட்டது. அப்போது ஜெயலலிதா பிரச்சாரத்திற்கு சென்ற போது எங்களுக்கு காசு கொடுங்கள் என்று மக்களே இடைத்தேர்தலில் காசு கேட்ட சம்பவம் நடந்தது. மக்கள் இப்படித்தான் பழக்கிவிடப்பட்டு இருக்கிறார்கள். முன்பு தேர்தல் ஆணையர் குரேஷி இது பற்றி சொல்கையில், இந்தியாவில் எந்த ஆயுதம் தாங்கிய குழுவையும் எதிர்த்து பாதுகாப்பாக நாங்கள் நடத்திவிடுவோம். ஆனால் அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பதையும், மக்கள் பணம் கேட்பதையும் தடுக்க முடியாது என்று கூறி உள்ளார்.

பொதுத்தேர்தல்

பொதுத்தேர்தல்

இந்த பணம் கொடுக்கும் பழக்கத்தை பொதுத்தேர்தலில்தான் தடுத்து நிறுத்துவது கஷ்டம். மாறாக இது போன்ற இடைத்தேர்தலில் இருந்து பணம் கொடுப்பதை நிறுத்த முடியும். ஆனால் இப்போதெல்லாம் பணத்தை மிகவும் வித்தியாசமாக கொடுக்கிறார்கள். சங்கங்கள் மூலம் பணம் கொடுக்கிறார்கள். கூகுள் பேவில் பணம் கொடுக்கிறார்கள். இந்த இடைத்தேர்தல் காரணமாக ஆட்சிக்கு சிக்கல் இல்லை. அப்படி இருக்கும் போது இந்த இடைத்தேர்தலை நேர்மையாக நடத்தாலமே? மந்திரிகளை இறக்காமல் நேர்மையாக தேர்தலை நடத்தலாமே. திமுகவிடம் இந்த கேள்விகளை கேட்டால் அதிமுக மந்திரிகளை இறக்கவில்லையா என்று கேட்பார்கள். அவர்கள் செய்ததும் தவறுதான். திமுகவாது மாற்றத்தை தொடங்கி வைக்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

ஜெயலலிதா லட்டில் மூக்குத்தி கொடுத்த சம்பவம் நடந்தது. திருமங்கலம் தேர்தல் பெரிய சர்ச்சையானது. காசு கொடுப்பது தேர்தல் நேரத்தில் பெரிய பிரச்சனையாகி உள்ளது. தேர்தலில் நேர்மையாக போட்டியிடுங்கள். வெற்றியோ தோல்வியோ விடுங்கள். ஏன் தோற்றால் கூட நல்லது. ஏனென்றால் தோல்வி அடைந்தால் உங்கள் பிழைகளை நீங்கள் சரி செய்து கொள்ள முடியும். ஆட்சிக்கு எந்த சிக்கலும் வராது என்ற போது ஏன் கவலைப்படுகிறீர்கள்? 12 மந்திரிகள் ஒரு இடத்தில் கேம்ப் செய்தால் என்ன நடக்கும் என்று பாருங்கள்? தேர்தல் முடிவு எப்படி வரும் என்று பாருங்கள்? இடைத்தேர்தலில் என்ன நடக்கும் என்பதைதான் 20 வருடமாக பார்த்துக்கொண்டு இருக்கிறோமே.. இடைத்தேர்தலில் ஆளும் கூட்டணி தானே வென்றுகொண்டு இருக்கிறது. ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தால் ஆளும் கட்சிக்கு என்ன ஆகிவிடும்? அப்போதுதான் ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தால் அதை எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்ள முடியும், அதுதான் ஆளும் தரப்பிற்கும் நல்லது, அதைவிட்டுவிட்டு வெற்றிபெற இவர்கள் ஏன் துடிக்கிறார்கள்., என்று மூத்த பத்திரிகையாளர் மணி கேள்வி எழுப்பி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+