தீரன் சின்னமலையின் படைத்தளபதி மாவீரர் பொல்லானுக்கு சிலை! ஜரூராக நடக்கும் பணிகள்! அமைச்சர் ஆய்வு!
தீரன் சின்னமலையின் படைத்தளபதி பொல்லானுக்கு சிலையுடன் கூடிய அரங்கம்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் படைத்தளபதி மாவீரர் பொல்லானுக்கு சிலை நிறுவுவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
மாவீரர் பொல்லானுக்கு சிலை நிறுவப்பட வேண்டும் என்பது கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி உட்பட கொங்கு மண்டல அமைப்புகள் முன் வைத்த கோரிக்கையாகும்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

தீரன் சின்னமலை படைத்தளபதி
மாவீரர் பொல்லான் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு என்பது, நாட்டிற்கு மிகப்பெரிய தியாகம் செய்த தியாகியாக உள்ளார். மூன்று பெரிய போர்களிலே தீரன் சின்னமலையோடு இணைந்து, ஆங்கிலேயர்களை எதிர்த்து மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது ஆங்கில அரசாங்கம், அவர்களுடைய படை என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கிறது, என்னென்ன திட்டங்களை அவர்கள் வகுக்கிறார்கள் என்பதை எல்லாம் பொல்லான் எப்படியோ அறிந்து தான் தீரன் சின்னமலையிடம் அதை தெரிவித்து, அவர்களுடன் இணைந்து, அந்த வெற்றியை பெறுவதற்கு மிகப்பெரிய உதவியாக இருந்தவர் மாவீரர் பொல்லான்.

மாவீரர் பொல்லான்
மேலும், மாவீரர் பொல்லான் வாழ்க்கை வரலாற்றினை இன்றைய சந்ததியினர் அறிந்திடும் வகையில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட, வடுகப்பட்டி இ கிராமம், ஜெயராமபுரத்தில் தமிழ்நாடு பூமிதான வாரியம், சென்னைக்கு சொந்தமான சுமார் 0.16.6 ஹெக்டேர் (41.00) சென்ட் பரப்பளவில் சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான இடம் புலத்தணிக்கை மேற்கொண்டு சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அரசிற்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் நேரில் ஆய்வு
ஜெயராமபுரத்தில் சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்கான தேர்வு செய்யப்பட்ட இடத்தினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அலுவலர்களுடன் சென்று பார்வையிட்டார். அவருடன் மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ் மற்றும் அரசு அலுவலர்களும் பார்வையிட்டனர்.

கோரிக்கை
மாவீரர் பொல்லானுக்கு சிலை நிறுவப்பட வேண்டும் என்பது கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி உட்பட கொங்கு மண்டல அமைப்புகள் முன் வைத்த கோரிக்கையாகும். விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திறப்பு விழா நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications