பைக்கை நிறுத்தி விட்டு... இளம்பெண்ணை கன்னத்தில் பளார் பளார் என அறைந்த இளைஞர்.. ஈரோட்டில் பரபரப்பு
ஈரோடு: இளம்பெண்ணை இழுத்து வைத்து கன்னத்தில் பளார் பளார் என அறைந்த இளைஞர், பிறகு அவசர அவசரமாக தன்னுடைய பைக்கை எடுத்து கொண்டு மின்னலென பறந்துவிட்டார்.. ஏன்?
கவுந்தப்பாடி அருகே உள்ள பகுதி செந்தாம்பாளையம். இங்கு ஒரு இளம்பெண் தோட்டத்து பாதையில் கவுந்தப்பாடியை நோக்கி தன்னுடைய வீட்டுக்கு டூ வீலரில் போய் கொண்டிருந்தார்.

அப்போது பின்னாடியே ஒரு இளைஞர் பைக்கில் வந்தார். திடீரென அந்த பெண்ணின் டூவீலர் மீது பைக்கில் இடித்தார். இதில் நிலைகுலைந்து அந்த பெண் கீழே விழுந்துவிட்டார். பிறகு அவரது கன்னத்தில் பளார் பளார் என அறைவிட்டார். இதில் அந்த பெண் அலறினார்.
இந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். ஆனால் அந்த இளைஞர் பைக்கை எடுத்து கொண்டு திரும்பி பார்க்காமல் பறந்தார். நடந்த சம்பவம் குறித்து கவுந்தப்பாடி போலீசில் பெண் புகார் கொடுக்கவும், இளைஞர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். பின்னர் விசாரணையில், அந்த இளைஞர் பெயர் வல்லரசு என்பதும் வயசு 20 என்பதும் தெரியவந்தது.
இவர் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கிறாராம்.. ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணுக்கு வல்லரசுவை பிடிக்கவில்லை. பலமுறை காதலை சொல்லியும் அந்த பெண் வல்லரசுவை ஏற்று கொள்ளவில்லையாம். இதனால் டென்ஷன் ஆகிவிட்ட வல்லரசு, தன் காதலியை நாலு சாத்து சாத்தலாம் என்று முடிவு செய்துள்ளார்.
அதற்காக விரட்டி வந்து, பளார் பளார் என நாலு அறை விட்டு, அந்த பெண் கீழே விழுந்து எழுந்த பிறகுதான் அவர் காதலி இல்லை, வேறு ஒரு பெண் என தெரியவந்துள்ளது. முகத்தை பார்த்ததும், பைக்கை எடுத்து கொண்டு எஸ்.ஆகி உள்ளார். இந்த விசாரணைக்கு பிறகு வல்லரசுவை கவுந்தப்பாடி போலீசார் கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 15 நாள் ஜெயிலில் அடைத்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications