அப்பதான் மைக்கை பிடிச்சாரு அண்ணாமலை.. பேசிட்டிருக்கும்போதே.. பக்கத்துல தென்னரசு.. அதுக்குள்ள வீடியோ
அண்ணாமலை வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்யும்போது, பக்கத்தில் நின்றிருந்த தென்னரசு தூங்கி தூங்கி வழிந்தாராம்
ஈரோடு: விரைவில் நடக்க போகும் இடைத்தேர்தலில் பிரச்சாரங்கள் உச்சக்கட்ட நிலையை எட்டி வரும்நிலையில், அண்ணாமலையின் பிரச்சார வீடியோ ஒன்றினை திமுகவினர் ஷேர் செய்து வருகிறார்கள்.
திமுக கூட்டணியை பொறுத்தவரை ஈவிகேஎஸ் இளங்கோவன் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், கொங்கு வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த கே.எஸ்.தென்னரசுவின் பெயர் எடுத்த எடுப்பிலேயே அன்று லிஸ்ட்டில் இடம்பெற்றது..
ஆனால், இவருக்கு பதில் முதலியார் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு சீட் தரலாமா என்ற ஆலோசனையிலும் எடப்பாடி தரப்பு ஈடுபட்டு, பிறகு அந்த முடிவை கைவிட்டது..

வராதீங்க இங்கே
காரணம், தென்னரசுவுக்கு ஏற்கனவே இந்த தொகுதியில் நல்ல அறிமுகம் உள்ளதாலும், தேர்தல் அனுபவம் பெற்றிருப்பதாலும் அவரையே வேட்பாளராக அறிவிக்க முடிவானது.. அதுமட்டுமல்ல, பெரும் செல்வாக்கு பெற்ற தென்னரசு, சுயேச்சையாக நின்றால் கூட 10 ஆயிரம் வாக்குகள் அவருக்கு உறுதியாம்.. அந்த அளவுக்கு தொகுதி மக்களிடம் இத்தனை காலமும் நெருங்கியே வந்துள்ளார் தென்னரசு. என்றார்கள்.. தற்போது தொகுதிக்குள் நடந்து வரும் சம்பவங்களோ வேறு மாதிரியாக இருந்து வருவதாக தெரிகிறது..

தென்னரசு
கடந்த வாரம், மார்க்கெட் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார் தென்னரசு.. அப்போது அங்கிருந்த வியாபாரிகள், தென்னரசுவை முற்றுகையிட்டனர்.. "எம்எல்ஏவாக இருந்தபோது நீங்க எங்களுக்கு எதுவுமே செய்யவில்லை" என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதேபோல, வீரப்பன்சத்திரம் பகுதி கமலா நகரில் தென்னரசுக்காக வாக்கு சேகரிக்க அதிமுகவினர் சென்றுள்ளனர்.. அப்போது, பெண் வாக்காளர்கள் தென்னரசுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்...இப்படிப்பட்ட சூழலில்தான் நேற்றுமுன்தினம் ஒரு வீடியோ வைரலானது..

மைக்கில் எடப்பாடி
தென்னரசுக்கு ஆதரவு கேட்டு எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.. திறந்த வேனில், ராஜகோபால் தோட்டம் என்ற இடத்தில் எடப்பாடிபழனிசாமி திமுகவை காரசாரமாக விமர்சித்து கொண்டிருந்தார்.. அப்போது, அவருக்கு பக்கத்தில் நின்றுகொண்டிருந்த தென்னரசு அடிக்கடி தன்னுடைய முகத்தை துடைத்துக்கொண்டே இருந்தார்.. லேசான தூக்கத்தில் கண்ணயர்ந்துவிட்ட தென்னரசு, பிறகு சுதாரித்துக் கொண்டு, கூடியிருந்த மக்களை நோக்கி, "கும்பிடு" போட்டார். எடப்பாடி பேசிட்டு இருக்கும்போதே தூங்கி வழிந்த தென்னரசு என்று சிலர் இந்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கினர்.

கண் அயர்ந்தார்
இப்போது அதுபோலவே ஒரு வீடியோவை மறுபடியும் இணையத்தில் சுழல விட்டுள்ளனர்.. நேற்றைய தினம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரத்தில் பேசிக்கொண்டிருந்தபோதே, பக்கத்தில் நின்றுகொண்டிருந்த தென்னரசு தூங்கி தூங்கி விழுந்துள்ளார்.. அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக வீரப்பசத்திரம், கிருஷ்ணம்பாளையம், கருங்கல்பாளையம் , காந்திசிலை ஆகிய இடங்களில் பாஜக மாநில அண்ணாமலை வாக்கு சேகரித்து கொண்டிருந்தார்.

பெரிய கும்பிடு
அப்போது அங்கிருந்த வேட்பாளர் தென்னரசு, முகத்தை துடைத்துக் கொண்டேயிருந்த நிலையில், ஒரு கட்டத்தில் தூக்கத்தை கண் அசைத்துவிட்டு, பிறகு லேசான தடுமாற்றத்துடன் விழித்துக் கொண்டு மக்களை நோக்கி கும்பிட்டுள்ளார்.. இப்படி அடுத்தடுத்து 2 வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ள நிலையில், இவரை வெற்றி பெற செய்து சட்டமன்றத்திற்கு அனுப்பினால், மக்களின் பிரச்னையை பற்றி பேசாமல் அங்கும் இப்படித்தான் தூங்குவாரா? என்று சிலர் கிண்டலாக கேட்டுள்ளனர்.. மேலும் பலரோ, "இதெல்லாம் இயல்பானது.. அசதி என்பது எல்லா மனிதர்களுக்குமே வரக்கூடிய சாதாரண விஷயம்.. இதையெல்லாமா பெரிதாக எடுத்து பேசுவது?" என்று பதிலடிகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.

சுண்டியிழுத்த கமல்
இதனிடையே, பாஜக பிரச்சாரம் குறித்து முக்கிய தகவல் ஒன்று வட்டமடித்து வருகிறது.. இந்த பாஜக பிரச்சார கூட்டத்திற்கு 100 அடி தூரத்தில்தான் கமலும் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.. நீண்ட நேரமாகியும் அண்ணாமலை வராததால் கூட்டத்திற்கு திரண்டவர்கள், கமலை பார்க்க சென்றுவிட்டார்களாம்.. அதனால், அண்ணாமலையின் பிரச்சாரத்தின்போது, அதிமுகவினர் பெருமளவு திரள முடியாமல் போனதுடன், பிரச்சாரத்தையும் புறக்கணித்தது பாஜவினருக்கு மேலும் அதிர்ச்சியை தந்துவிட்டதாக சொல்கிறார்கள்.. இன்னொன்றையும் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்த முதல்நாள் பிரச்சாரத்தில், அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை பற்றி ஒரு வார்த்தை கூட எங்குமே குறிப்பிடவில்லையாம். மாஜிக்கள் உட்பட, கூட்டணி கட்சி நிர்வாகிகள் பெயர்களை எல்லாம் மறக்காமல் சொன்ன அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி பெயரை மட்டும் சொல்லவில்லை என்கிறார்கள்.. என்னவா இருக்கும்??!!












Click it and Unblock the Notifications