Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இளங்கோவன் கையை இறுகப்பற்றிய ஸ்டாலின்.. திருமகன் ஈ.வெ.ரா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர்!

Subscribe to Oneindia Tamil

ஈரோடு : மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மகனை இழந்து வாடும் ஈவிகேஎஸ் இளங்கோவனின் கைகளை இறுகப் பற்றி உருக்கமாக ஆறுதல் தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளம் எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா இன்று உடல் நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது மறைவு அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த துயரச் செய்தியைக் கேட்டு அதிர்ந்துபோன முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களுடன் ஈரோட்ட்டுக்கு விரைந்து சென்று, திருமகன் ஈவெராவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

 திருமகன் ஈவெரா

திருமகன் ஈவெரா

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா, தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வந்தார். கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் முதல்முறையாகப் போட்டியிட்டு திருமகன் ஈவெரா வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாகப் பணியாற்றி வந்தார். திருமகன் ஈவெரா ஈரோட்டில் தங்கியிருந்து தொகுதி பணிகளை கவனித்து வந்தார்.

எம்.எல்.ஏ மறைவு

எம்.எல்.ஏ மறைவு

இந்நிலையில், கடந்த சில நாட்களாக திருமகன் ஈவெராவின் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால், அவரது தந்தை ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் ஈரோட்டுக்குச் சென்று அவரை கவனித்து வந்தார். இந்நிலையில் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா காலமானார்.

 அதிர்ச்சி

அதிர்ச்சி

திருமகன் ஈவெராவின் மறைவு காங்கிரஸ் கட்சியினர், ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் மட்டுமல்லாது அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அரசியல் தலைவர்கள் பலரும் திருமகன் ஈவெரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஈரோடு கச்சேரி சாலையில் உள்ள இல்லத்தில் திருமகன் ஈவெரா உடல் வைக்கப்பட்டுள்ளது.

 ஈரோடு சென்ற முதல்வர்

ஈரோடு சென்ற முதல்வர்

இந்நிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திருமகன் ஈவெரா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த சென்னையில் இருந்து கிளம்பினார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமானம் நிலையம் வந்து, அங்கிருந்து கார் மூலம் ஈரோடு சென்றார். அவருடன், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கேஎன்.நேரு, செந்தில் பாலாஜி, முத்துசாமி, ஆர்.காந்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி, உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

ஆறுதல் சொன்ன ஸ்டாலின்

ஆறுதல் சொன்ன ஸ்டாலின்

ஈரோடு சென்று திருமகன் ஈவெரா உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மகனை இழந்து வாடும் ஈவிகேஎஸ் இளங்கோவனின் கைகளை இறுகப் பற்றியும், கட்டித் தழுவியும் உருக்கமாக ஆறுதல் தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.

கோவையில் ஓய்வு

கோவையில் ஓய்வு

இதைத் தொடர்ந்து மீண்டும் கார் மூலம் கோவை வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகையில் இன்று இரவு ஓய்வெடுக்க உள்ளார். அவருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் அரசு விருந்தினர் மாளிகையில் இரவு ஓய்வெடுக்க உள்ளனர். நாளை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் சென்னை திரும்ப உள்ளனர்.

மகளை அழைத்துக்கொண்டு வந்தாரே

மகளை அழைத்துக்கொண்டு வந்தாரே

முன்னதாக, திருமகன் ஈவெரா மறைவுச் செய்தி அறிந்ததும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "அமைதியோடும் பொறுப்புணர்வோடும் அவை மூத்தவர்கள் மீது மரியாதையோடும் அவர் நடந்துகொள்ளும் விதத்தால் அனைவரது அன்புக்கும் உரியவராகத் திகழ்ந்து வந்தவர் ஈ.வெ.ரா. திருமகன். ஒரு மாதத்துக்கு முன்பு கூட, குதிரையேற்றப் போட்டியில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற தனது மகளை மகிழ்ச்சியுடன் அழைத்துக்கொண்டு வந்து என்னிடம் வாழ்த்து பெற்றுச் சென்ற தம்பி திருமகனின் உற்சாகம் ததும்பும் முகம் மனதில் நீங்காமல் நிற்கிறது.

எப்படி தேற்றுவது?

எப்படி தேற்றுவது?

தனது அன்புமகனை இழந்துள்ள ஆருயிர் அண்ணன் இளங்கோவன் அவர்களை எப்படி தேற்றுவது எனத் தெரியாமல் தவிக்கிறேன். ஈ.வெ.ரா. திருமகன் அவர்களின் மறைவால் துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர், ஈரோடு மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கனத்த இதயத்துடன் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என உருக்கமாக இரங்கல் தெரிவித்திருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+