இன்னுமா என்னை யாருனு தெரியலை.. கோபியில் செங்கோட்டையன் பக்கா பிளான்.. எடப்பாடிக்கு செக்
ஈரோடு: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கோபிசொட்டிபாளையத்தில் செங்கோட்டையன் டெபாசிட் வாங்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இதற்கு செங்கோட்டையன் அளித்துள்ள பதிலால் அதிமுக அதிர்ச்சியடைந்துள்ளது.
கோபிசெட்டிப்பாளையத்தில் தவெக நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தேர்தல் முடிவில் எல்லாம் தெரியும். எங்களை பொறுத்தவரை மக்களை நம்பி களம் காண்கிறோம். மற்றவர்களை நம்பி களம் காணவில்லை. மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசி சொல்வார்கள். நாங்கள் அப்படியல்ல. மக்கள் எங்களுக்கு நல்ல தீர்ப்பு கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்.

தவெக ஆதரவு அலை
சிலர் நான் டொபாசிட் இழக்க வேண்டும் இங்கே தான் வெற்றி விழா நடக்கும் என்றார்கள். அவர்களை போன்றவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள். இங்கே என்ன நடக்கிறது, மக்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்று எடை போட தெரியாமல் இருக்கிறார்கள். இவர்கள் தமிழகத்தை எப்படி எடை போடுவார்கள் என்பது கேள்வியாக உள்ளது. நயினார் நாகேந்திரனால் பாஜக வாக்கு சதவீதம் 11 இல் இருந்து 5 சதவீதமாக மாறியுள்ளது. (TVK Sengottaiyan)
திருப்பதி நாமம்
அவர் தலைமையே ஏற்பது பாஜகவுக்கு பின்னடைவு தான். எடப்பாடி பழனிசாமிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அங்கு எல்லோருக்கும் தோல்வி பயம் வந்துவிட்டது. சீட் கிடைக்கும் என்று எல்லோரையும் பணம் கட்ட சொன்னார்கள். பலருக்கு திருப்பதி நாமத்தை கையில் கொடுத்துவிட்டார்கள். எம்ஜிஆர், அம்மா காலத்தில் இருந்த நிலை வேறு. இப்போது வரை. தற்போது தமிழ்நாடு முழுவதும் தவெகவுக்கு ஆதரவாக அலை வீசுகிறது.
காய்த்த மரத்திற்கு கல்லடி
எங்கள் தலைவர் விஜய் முதலமைச்சராவது உறுதி என்று மக்கள் தெளிவாக உள்ளனர். சீமான் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் தவெக மீது விமர்சனம் வைக்கலாம். காய்த்த மரத்தில் தான் கல்லடி படும். பொருத்திருந்து பாருங்கள். அதிமுகவில் என்னை தோற்கடிப்பேன் என்று சொன்னவர்கள் எல்லாம் தற்போது தெருமுனையில் உள்ளனர். ஆ . ராசா ஆடியோ குறித்து எல்லாம் நான் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது" என்றார்.
-
சென்னையில் கால் வைத்த செங்கோட்டையன்.. அடுத்து நொடி எடப்பாடிக்கு அதிர்ச்சி.. 3 அதிமுக MLAகள் ராஜினாமா -
செங் இஸ் கிங்.. பாஜக பாலிடிக்ஸை கையிலெடுத்த விஜய்! அலறும் கூட்டணி கட்சிகள்! கன் மாதிரி நிற்கும் தவெக -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications