நான் எத்தனை நிமிஷம் பேசுனா உங்களுக்கு என்ன சார்? ஈரோட்டில் விஜய் ஆவேசம்!

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: நான் எத்தனை நிமிடங்கள் பேசினால் உங்களுக்கு என்ன என்று தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி இருக்கிறார். எனது பேச்சில் இருக்கும் விஷயங்கள் என்ன என்று பாருங்கள் என்று கூறிய விஜய், தரக்குறைவாகப் பேசும் அரசியலை செய்ய விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். தவெக பொதுக்கூட்டங்களில் விஜய் குறைவான நிமிடங்களே பேசுவதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், விஜய் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

கரூர் சம்பவம் நடந்து 82 நாட்களுக்கு பின் தவெக தலைவர் விஜய் ஈரோடு மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இந்த பொதுக்கூட்டம் 11 மணிக்கு தொடங்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், 11.20 மணிக்கு விஜய் பொதுக்கூட்டம் நடக்கும் திடலுக்கு வந்தார். இதையடுத்து செங்கோட்டையன் வரவேற்புரை ஆற்ற, அடுத்தடுத்து நிர்வாகிகள் பேசினர்.

TVK Vijay

இறுதியாக விஜய் பேசுகையில், எனக்கு நீங்கள் மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்து இருக்கிறீங்க... நீங்க என்ன பண்ணினாலும் என்னை மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டாங்க.. உங்களை நம்பித்தான் நான் வந்து இருக்கேன். தவெக தொண்டர்கள் எனக்கு தைரியம் கொடுத்துள்ளனர். உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றியுடன் இருப்பேன்.

அண்ணாவும், எம்ஜிஆர்-ம் தமிழ்நாட்டின் சொத்து. அவர்களை பயன்படுத்துவதை பற்றி யாரும் புகார் சொல்லக்கூடாது. நாங்கள் ஒருவழியில் அரசியல் செய்துகிட்டு போகிறோம். நீங்கள் புலம்பி தள்ளுறீங்க.. இது எப்படி இருக்கு தெரியுமா? எனக்கு பயம் இல்லை என்று கத்திகிட்டே பயந்து ஓடும் சிறுவன் மாதிரி இருக்கு.. முதலில் மண்டை மேல இருக்க கொண்டைய மறைங்க..

அதேபோல் களத்திலேயே இல்லாதவங்களையும் களத்திற்கும் அவர்களுக்கும் சம்மந்தமே இல்லாதவர்களையும் தவெக எதிர்க்கப் போவதில்லை. நீங்கள் கேட்குறீங்க என்பதற்காக எல்லாம் எதிர்க்க முடியாது. எங்களுக்கு நிறையா வேலை இருக்கு. அதேபோல் நான் எத்தனை நிமிடங்கள் பேசினால் உங்களுக்கு என்ன சார்? எனது பேச்சில் இருக்கும் விஷயங்கள் என்ன என்று பாருங்கள்.

தரக்குறைவாகப் பேசும் அரசியலை செய்ய விரும்பவில்லை. அப்படியான அரசியலை உங்களை விடவும் என்னாலும் சிறப்பாக செய்ய முடியும். ஆனால் எங்களுக்கு அது தேவையில்லை. விஜய் பன்ச் டயலாக் மாதிரி பேசுகிறான் என்கிறார்கள். சினிமாவை போல் பேசுகிறான் என்கிறார்கள். அண்மையில் சிஎம் ஒரு கூட்டத்தை ஒரு கேரக்டரையே புரிந்து கொள்ள மாட்டுகிறீர்களே என்று பேசி இருக்கிறார்.

அதுமட்டும் சினிமா வசனம் அல்லாமல், சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்த வசனமா.. திமுகவும், மத்திய அரசும் தான் இந்த விஜய்யின் கேரக்டரையே புரிந்து கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார். விஜய்யின் இந்த பேச்சு சுமார் 32 நிமிடங்களாக அமைந்த்யுள்ளது. இதற்கு முன்பாக புதுச்சேரியில் விஜய் 11 நிமிடங்கள் பேசி இருந்தார்.

அதேபோல் விக்கிரவாண்டி மாநாட்டில் விஜய் சுமார் 45 நிமிடங்கள் வரை பேசி இருந்தார். மதுரை மாநாட்டில் சுமார் 35 நிமிடங்கள் வரை பேசி இருந்தார். இதன்பின் விஜய்யின் மிக நீண்ட உரையாக இந்த ஈரோடு பொதுக்கூட்ட உரை அமைந்துள்ளது. இதனால் வரும் நாட்களிலும் விஜய்யின் உரை கொஞ்சம் நீண்டதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+