என்ன இன்னைக்கு ரொம்ப ஜாம் ஆகுது! சின்னத்தை மாற்றி வாக்கு கேட்ட செங்கோட்டையன்! அடுத்து ட்விஸ்ட்!
ஈரோடு: தமிழக வெற்றிக் கழத்தின் நிர்வாகி செங்கோட்டையன், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், சின்னத்தை மாற்றி வாக்கு கேட்ட சம்பவம் விஜய் ரசிகர்கள்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கோடிக்கோடியாய் செலவு செய்து, தேர்தலில் களமிறக்கப்பட்ட வேட்பாளருக்கு, விசில் சின்னத்தில் வாக்கு கேட்காமல், வழக்கம்போல இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டிருக்கிறார் செங்கோட்டையன்.

செங்கோட்டையனின் சொதப்பல்
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் தொகுதியில், தவெக வேட்பாளர் தமிழ் செல்வியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று வழக்கமாக எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளையே அவர் முன்வைத்திருந்தார். எல்லாவற்றையும் பேசி முடித்துவிட்டு கடைசியாக, தவெகவுக்கு வாக்களியுங்கள் என்று கேட்பதற்கு பதிலாக, இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று கேட்டிருக்கிறார்.
வாய் தவறி வந்த வார்த்தை
"புரட்சியை உருவாக்க வேண்டும். அந்த புரட்சிக்கு தளபதிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து.. இரட்டை இலை சின்னத்திலேயே வாக்கு கேட்டு பழகிவிட்டேன்" என்று சமாளித்திருக்கிறார். இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகின்றன. விசில் சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க விஜய் எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். ஆனால், செங்கோட்டையன் அசால்ட்டாக இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டிருக்கிறாரே! என்று விஜய் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
தவெக தலைவர்கள்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்கள், வேட்பாளர்கள் இப்படி மாற்றி வாக்கு கேட்பது புதுசு கிடையாது. கட்சியின் தேர்தல் மேலாண்மைபொதுச் செயலாளரும், வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளருமான ஆதவ் அர்ஜுனா, திமுக ஜெயிக்கும் என்று கூறி சலசலப்பை ஏற்படுத்தியிருந்தார். "சென்னையின் தொகுதிகளில்.. 13 தொகுதிகளில் திமுகதான் பெரிய அளவில் ஜெயிக்கும்" என்று கூறியிருந்தார். பின்னர் வாய் தவறி இப்படி சொல்லிவிட்டதாக சமாளிக்கப்பட்டது.
அதேபோல, திருத்தணி தவெக வேட்பாளர் சத்தியகுமார், "தமிழக வெற்றிக் கழகம் 2034 தொகுதிகளில் வெற்றிப் பெரும்" என்று கூறியிருந்தது பயங்கர ட்ரோலாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை.. ஜூலையில் கூடும் சட்டசபை? பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் வரும்? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
நள்ளிரவு சர்ப்ரைஸ் ரெய்டு விட்ட அமைச்சர்.. கோவை அரசு மருத்துவமனையில் ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications