ஈரோட்டில் நேற்று வரை திருவிழாக் கோலம்! இன்று ஆள் அரவமின்றி வெறிச்சோடிய சாலைகள்! களையிழந்த வீதிகள்!
இடைத்தேர்தல் திருவிழா முடிந்ததால் வெறிச்சோடிய ஈரோடு
ஈரோடு: ஈரோட்டில் நேற்று வரை திரும்பிய பக்கமெல்லாம் திருவிழாக் கோலத்தில் காணப்பட்ட சாலைகளும், வீதிகளும் இன்று ஆள் அரவமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
கடந்த ஒரு மாதமாக வாடகை வீடுகள் அனைத்தும் ஹவுஸ்ஃபுல்லாக காட்சியளித்த நிலையில் இன்று மீண்டும் டூலெட் போர்டுகள் தொங்க விடப்பட்டுள்ளன.
போடுங்கம்மா ஓட்டு என்ற முழக்கத்துடன் பெரிய கூட்டமாக சுற்றி வந்த அரசியல் கட்சியினர் நேற்று மாலையே ஈரோட்டை காலி செய்து புறப்பட்டுவிட்டதால் வீதிகள் தோறும் களையிழந்து காணப்படுகின்றன.

ஈரோடு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை வாக்குப்பதிவு நாள் என்பதால் வெளிமாவட்டங்களை சேர்ந்த அரசியல் கட்சி நிர்வாகிகள் நேற்று மாலையே அவரவர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு விட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசலுடனும், எந்நேரம் பார்த்தாலும் ஜெஜெவென கூட்டத்துடனும் காணப்பட்ட ஈரோடு கிழக்குத் தொகுதி இன்று வெறிச்சோடிக் காணப்படுகிறது.

மீண்டும் வேலைக்கு
காலை மாலை என நாளொன்றுக்கு இரண்டு முறை வீடு தேடி வந்த அரசியல் கட்சியினராலும் அவர்கள் கொடுத்த பரிசுப் பொருட்களாலும் ஈரோடு கிழக்குத் தொகுதி மக்கள் உற்சாகமுடன் காணப்பட்டனர். பலரும் வேலைக்கு கூட செல்லாமல் பிரச்சாரத்தில் பங்கேற்று அதன் மூலம் வருமானம் ஈட்டி வந்தனர். இப்போது ஆட்டம் காலி படுதா காலி என்பதால் மீண்டும் இன்று முதல் வேலைக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.

பிரியாணி விருந்து
திமுகவும், அதிமுகவும் போட்டி போட்டுக் கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் பிரியாணி விருந்து வைத்தது. இதில் யார் வேண்டுமானால் பங்கேற்று சாப்பிடலாம் என்ற நிலை இருந்ததால் எல்லோரும் ஒரு பிடி பிடித்தார்கள். மொத்தத்தில் ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களை அரசியல் கட்சி நிர்வாகிகள் தங்கத் தட்டில் வைத்து தாலாட்டினார்கள் என்று கூறலாம்.

வியாபாரம் மந்தம்
கடந்த ஒரு மாத காலமாக ஈரோடு கிழக்குத் தொகுதிக்குட்பட்ட கடைகளிலும், உணவு விடுதிகளிலும், தேநீர் கடைகளிலும் வியாபாரம் சக்கை போடு போட்டது. ஆனால் நேற்றிரவு முதலே வியபாரம் மந்த நிலையை அடைந்துவிட்டது. இதனால் வியாபாரிகள் தரப்பினரும் களையிழந்து காணப்படுகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications