VIjay Erode Speech: திமுக ஒரு தீய சக்தி.. தீய சக்தி.. தவெக தூய சக்தி.. அதிமுக வாய்ஸில் ஈரோட்டில் விஜய் பேச்சு
ஈரோடு: திமுக ஒரு தீயசக்தி.. தீயசக்தி.. தீயசக்தி.. தீயசக்தி.. தீயசக்தி.. தவெக ஒரு தூயசக்தி.. இங்கே தீயசக்திக்கும் தூயசக்திக்கும் இடையில்தான் போட்டியே.. என்று ஈரோடு பெருந்துறை கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய் பேசி உள்ளார்.
ஈரோடு பெருந்துறை கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், மஞ்சள்... பொதுவா.. நல்ல காரியம் ஆரம்பிக்கும் போது மஞ்சள் வச்சிதான் ஆரம்பிப்பாங்க.. நம்ம வீட்டில் கூட அம்மா, அக்கா, தங்கைகள், நமக்காக நாம நல்லா இருக்க்னும் என்பதுதான் மஞ்சள் கட்டித்தான் வேண்டிப்பாங்க.. மங்களகரமான மஞ்சள் விளையும் பூமிதான் ஈரோடு. அதுமட்டும் இல்லை.. இங்க ஒரு மகத்தான ஒரு மனிதர் பற்றி பேசியே ஆகணும்.. ஈரோடு மண்.. விவசாயத்திற்கு பெயர்போன மண்.

எனக்கு நீங்கள் மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்து இருக்கிறீங்க... நீங்க என்ன பண்ணினாலும் என்னை மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டாங்க.. உங்களை நம்பித்தான் நான் வந்து இருக்கேன். தவெக தொண்டர்கள் எனக்கு தைரியம் கொடுத்துள்ளனர். உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன்.
இப்போது இதே மண் அத்திக்கடவு அவிநாசி திட்டம் விரிவு செய்யப்படாமல் வறட்சியில் உள்ளது. அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை விரிவு செய்ய சொன்னால் இவர்கள் அதை செய்யாமல்.. கண்காட்சி நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். அண்ணாவும், எம்.ஜி.ஆரும் தமிழ்நாட்டின் சொத்து. அவர்களை பயன்படுத்துவதை பற்றி யாரும் புகார் சொல்லக்கூடாது. நாங்கள் ஒருவழியில் அரசியல் செய்துகிட்டு போகிறோம். நீங்கள் புலம்பி தள்ளுறீங்க.. இது எப்படி இருக்கு தெரியுமா? எனக்கு பயம் இல்லை..என கத்திகிட்டே பயந்து போகும் சிறுவன் மாதிரி இருக்கு.. முதலில் மண்டை மேல இருக்க கொண்டைய மறைங்க சார்..
தயவு செய்து பெரியார் பெயரை மட்டும் சொல்லி கொள்ளையடிக்காதீங்க, களத்திலேயே இல்லாதவங்களையும் களத்திற்கும் அவங்களுக்கும் சம்மந்தமே இல்லாதவங்களையும் எதிர்க்க போவது இல்லை. நீங்கள் கேட்குறீங்க என்பதற்காக எதிர்க்க முடியாது.. எங்களுக்கு நிறைய வேலை இருக்கு.. என்று விஜய் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
விஜய்யை எப்படி முடக்கலாம் என்று தான் அவர்கள் யோசித்துகொண்டு இருக்கிறார்கள். 24 * 7 என எப்போதும் இதைத் தான் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். விஜய் அரசியலே பேச மாட்டுக்கிறார்.. விஜய் கொஞ்ச நேரம் தான் பேசுகிறார். வெறும் 8 நிமிஷம் தான் பேசுறார். நான் ஏன் சார் பேச வேண்டும். தனிப்பட்ட முறையில் பேசுவது தான் அரசியல் என்றால் பேச தெரியாது. தெரியும், உங்களை விட எனக்கு அதிகமாகவே பேச தெரியும். ஆனால் அந்த அரசியல் பேச வரவில்லை
காஞ்சிபுரத்தில் பேசியதை தவறாக புரிந்துகொண்டு பேசுகிறார்கள். மக்களுக்கு இலவசமாக கொடுப்பதை ஏன் விமர்சிக்கிறீங்க.. ஓசி ஓசி என ஏன் சொல்கிறீர்கள். என்ன கேட்பதற்கு யாரும் இல்லைன்னு நினைச்சீங்களா.. மக்களுக்கு ஒன்னு என்றால் விஜய் வந்து நிற்பான். மக்களும் இப்படித்தான். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொன்னால்.. பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதாக சொல்கிறார்கள். உண்மையிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா.. (தொண்டர்கள் இல்லை.. இல்லை..) என்ன சொல்வது கேட்கிறதா?
திமுகவை சிலர் மோசமாக விமர்சனம் செய்வார்கள். மேடம் ஜெயலலிதா கூட திமுகவை கடுமையாக பேசி இருக்கிறார். அப்போதெல்லாம் ஏன் என்று யோசித்தேன். ஏன் இப்படி பேசுகிறார் என்று யோசித்து இருக்கிறேன். இப்போது புரிகிறது. நானும் சொல்கிறேன். திமுக ஒரு தீயசக்தி.. தீயசக்தி.. தீயசக்தி.. தீயசக்தி.. தீயசக்தி.. தவெக ஒரு தூயசக்தி.. இங்கே தீயசக்திக்கும் தூயசக்திக்கும் இடையில்தான் போட்டியே.
-
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
ஸ்கீமுக்கு 10 செகண்டா? தலைமை செயலகத்தில் 75 நிமிட சர்ப்ரைஸ்! 436 திட்டங்களை விஜய் நகர்த்தியது எப்படி? -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
தவெகவில் இணைந்த ஜாய் கிரிசில்டா.. பெண்களுக்காக குரல் கொடுக்கவே அரசியலுக்கு வந்ததாக பேட்டி! -
“மின்வெட்டு ஏற்படுவது உண்மைதான்.. மறைக்கவோ, மறுக்கவோ இல்லை”.. ஒப்புக்கொண்ட மின்வாரிய தலைவர் -
நீ என்ன திமுக ஆளா? மரியாதை இல்லாமல் பேசிய அமைச்சர்கள்.. சட்டசபை செயலர் சீனிவாசன் ராஜினாமா பின்னணி?! -
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன் -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்!












Click it and Unblock the Notifications