யாரு லீக் பண்ணது? 2 மணி நேரங்களுக்கு முன்பே.. கசிந்த ஸ்பீச்.. யாரந்த கருப்பு ஆடு.. ஷாக்கான விஜய்!

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு பெருந்துறை நேற்று தவெக தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் எல்லாம்.. அவர் பேசுவதற்கு முன்பே இணையத்தில் லீக்கானது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. விஜய் பேச்சை அவரின் கட்சிக்கு உள்ளேயே இருந்து யாரோ லீக் செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

நேற்று விஜய் 11.30 மணி அளவில் காலையில் பேசினார். அவர் பேசுவதற்கு 2 மணி நேரங்களுக்கு முன்பே..அவரின் முழுமையான பேச்சு இணையத்தில் கசிந்தது. நெட்டிசன்கள் பல.. முக்கியமாக திமுக ஆதரவு ஐடிக்கள் பல விஜய் பேசுவதற்கு முன்பே..விஜயின் பேச்சே அப்படியே இணையத்தில் பதிவிட்டனர்.

Tamilaga Vetri Kazhagam Vijay

கவர்மெண்டா கண்காட்சியா.. எம்ஜிஆரும் அண்ணாவும் தமிழ்நாட்டோட சொத்து.. உங்களுக்கு காசு தான் துணை எனக்கு மாஸ் தான் துணை.. தீயசக்தி தூயசக்தி.. மனப்பாடம் பண்ணியதை ஒப்பிக்க வருகிறார் உங்கள் விஜய்.. திமுக ஆட்சியும் பிரச்சனைகளும் பெவிக்கால் போட்டு ஒட்டுன ப்ரண்ட்ஸ் மாதிரி என்று சொல்லிவிட்டு மாஸாக பார்க்கவும். என்றெல்லாம் விஜய் பேசிய விஷயங்கள் அப்படியே இணையத்தில் கசிந்து உள்ளது.

2 மணி நேரங்கள்

விஜய் பேசிய விஷயங்கள் எல்லாம் வார்த்தை மாறாமல்.. அப்படியே 2 மணி நேரங்களுக்கு முன்பே கசிந்தது இணையத்தில் கசிந்தது கட்சிக்கு உள்ளே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. யாருங்க இந்த பேச்சை எல்லாம் கசியவிட்டது என்று விஜய் கோபம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. கட்சிக்கு உள்ளேயே இருக்கும் அந்த கருப்பு ஆடு யார் என்று விஜய் கோபத்தில் கேட்டதாக கூறப்படுகிறது. எனக்கு எழுதிக்கொடுத்தவர் அதை லீக் செய்ய வாய்ப்பு இல்லை.. வேறு யார் லீக் செய்தது என்ற கேள்வி விஜய்க்கு எழுந்து உள்ளதாம்.

Tamilaga Vetri Kazhagam Vijay

விஜய் பேசியது என்ன ?

ஈரோடு பெருந்துறை கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், மஞ்சள்... பொதுவா.. நல்ல காரியம் ஆரம்பிக்கும் போது மஞ்சள் வச்சிதான் ஆரம்பிப்பாங்க.. நம்ம வீட்டில் கூட அம்மா, அக்கா, தங்கைகள், நமக்காக நாம நல்லா இருக்க்னும் என்பதுதான் மஞ்சள் கட்டித்தான் வேண்டிப்பாங்க.. மங்களகரமான மஞ்சள் விளையும் பூமிதான் ஈரோடு. அதுமட்டும் இல்லை.. இங்க ஒரு மகத்தான ஒரு மனிதர் பற்றி பேசியே ஆகணும்.. ஈரோடு மண்.. விவ்சாயத்திற்கு பெயர்போன மண்.

எனக்கு நீங்கள் மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்து இருக்கிறீங்க... நீங்க என்ன பண்ணினாலும் என்னை மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டாங்க.. உங்களை நம்பித்தான் நான் வந்து இருக்கேன். தவெக தொண்டர்கள் எனக்கு தைரியம் கொடுத்துள்ளனர். உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன்.

Tamilaga Vetri Kazhagam Vijay

காலிங்கராயன் இங்கே கட்டிய அணையை மறக்க முடியுமா? அந்த காலத்து ஹீரோ அவர்.. அவர் இங்கே எப்படி அணை கட்டினார் தெரியுமா? இங்கே பாம்பு ஒன்று போனதாம்.. அந்த கதையை சொல்கிறேன் கேளுங்கள்.. அந்த பாம்பு சென்ற திசையில் எல்லாம் இவர் நதியின் பாதையை நிர்ணயித்து.. அணையை கட்டினார்.. அப்படி ஹீரோக்கள் வாழ்ந்த மண் இது.

ஆனால் இப்போது இதே மண் அத்திக்கடவு அவிநாசி திட்டம் விரிவு செய்யப்படாமல் வறட்சியில் உள்ளது. அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை விரிவு செய்ய சொன்னால் இவர்கள் அதை செய்யாமல்.. கண்காட்சி நடத்திக்கொண்டு இருக்கிறார்கள், என்று விஜய் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+