ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

10 சக்கர லாரியா?.. 12 சக்கர லாரியா?.. பண்ணாரி செக் போஸ்ட்டில்.. லஞ்சம் வசூலா.. பரபர புகார்கள்!

செக்போஸ்ட்டில் லஞ்சம் வாங்கிய ஊழியர்களின் வீடியோ வைரலாகி வருகிறது

Google Oneindia Tamil News

ஈரோடு: பண்ணாரி செக்போஸ்ட்டில்.. ராத்திரி நேரத்தில்.. டயர்கள் அடிப்படையில் லாரிகளை தரம் பிரித்து லஞ்சம் வாங்கி உள்ளனர் ஊழியர்கள்.. அந்த வீடியோதான் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகிறது.

Recommended Video

    10 சக்கர லாரியா?.. 12 சக்கர லாரியா?.. பண்ணாரி செக் போஸ்ட்டில்.. லஞ்சம் வசூலா.. பரபர புகார்கள்!

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-மைசூர் நெடுஞ்சாலையில், தமிழக-கர்நாடக எல்லையில் பண்ணாரி அம்மன் கோயில் அருகே 2 மாநில எல்லையில் செக் போஸ்ட்டுகள் உள்ளன.. வட்டார போக்குவரத்து துறை, போலீஸ், வனத்துறை சோதனை சாவடிகள் உள்ளன.

    viral video: bribery from lorry driver in erode bannari checkpost

    அதனால், தமிழகம், கர்நாடகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் சரக்கு லாரி போக்குவரத்து நடந்து வருகிறது.. அதனால் இந்த ரோடு எப்போதுமே பிஸியாக இருக்கும்.. முக்கியமான சோதனை சாவடியும்கூட!

    இந்த பக்கம் வரும் சரக்கு லாரிகளில் அதிக பாரம் ஏற்றி செல்லப்படுகிறதா? எல்லா வண்டிகளுக்கும் லைசென்ஸ் உள்ளதா? என்ற சோதனைகள் வழக்கமாக நடந்து கொண்டே இருக்கும். ஒருவேளை முறைகேடாக, அதாவது, அதிக பாரம் ஏற்றி லாரிகள் கடந்து சென்றால், அந்த டிரைவர்களிடம் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக கூறப்பட்டு வந்தது.

    தற்போது அது சம்பந்தமாக வீடியோவே வெளியாகிவிட்டது.. சம்பவத்தன்று இரவு, வட்டார போக்குவரத்து சோதனை சாவடியில், ஒரு லாரி வந்து நிற்கிறது, அந்த டிரைவரிடம் அங்கிருந்த அதிகாரி ரூ.3 ஆயிரம் கேட்கிறார்.. உடனே அந்த டிரைவர்களும் பணம் தந்துவிடுகிறார்கள்.

    அது சம்பந்தமாக தங்களுக்கு எழுதி தர முடியுமா என்று டிரைவர் கேட்க, அதிகாரியோ, "லஞ்சமாக பெறும் பணத்திற்கு எழுதி தர முடியுமா? என்று சொல்லிவிட்டு, 10 சக்கர லாரியா? 12 சக்கர லாரியா?" என்று விசாரித்து விட்டு பணம் வாங்குவது பதிவாகி உள்ளது.

    மக்கள் இக்கட்டான தருணத்தில் உள்ள போது சொத்துவரி வசூலிப்பதா... மு.க.ஸ்டாலின் கண்டனம்மக்கள் இக்கட்டான தருணத்தில் உள்ள போது சொத்துவரி வசூலிப்பதா... மு.க.ஸ்டாலின் கண்டனம்

    இந்த செக்போஸ்ட்டில் ஆய்வாளர் பிரேம ஞான குமாரிதான் பொறுப்பாளர் ஆவார்.. அவருடன் உதவியாளர் முனியப்பனும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. 2 நாளைக்கு முன்னாடிதான் பிரேமா சென்னையில் இருந்து டிரான்ஸ்பர் ஆகி இங்கு வந்தார்.. பொறுப்பேற்ற 2-வது நாளே இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை மட்டுமல்லாமல் பரபரப்பையும் சேர்த்து தந்து வருகிறது.... இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வரு

    English summary
    viral video: bribery woman officer in erode bannari checkpost
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X