செல்போனை “ஸ்விட்ச் ஆஃப்” செய்யுங்க.. ஈரோடு கிழக்கில் வாக்காளர்களுக்கு “புது ரூல்ஸ்” போட்ட அதிகாரிகள்

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் செல்போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்த பிறகே வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி இருக்கிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வரும் நிலையில் செல்போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்த பிறகே வாக்குப்பதிவு அறைக்குள் வாக்காளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி மாதம் காலமான நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இன்று பதிவாகும் வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

Voters advised to switch off their cellphone in Erode east election

77 பேர் களத்தில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். திமுக கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸின் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளார்கள். அதேபோல் தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா ஆகியோர் இதில் போட்டியிடுகின்றனர்.

7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். இந்த நிலையில் செல்போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்த பிறகே மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாக்குப்பதிவு செய்வதை போட்டோ எடுப்பது, லைவ் செய்வது போன்ற காரியங்களில் வாக்காளர்கள் சிலர் இதற்கு முன் ஈடுபட்டு இருப்பதால் செல்போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்த பிறகே அவர்களை தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவு அறைக்கு அனுமதிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+