ஈரோடு பரிமளா.. கணவனை வைத்துக் கொண்டே காதலனுடன்.. சாக்கு மூட்டையை பார்த்து ஆடிப்போன போலீஸ்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை காசி பில்லாம் பாளையத்தில் ஸ்ரீதர் பரிமளா தம்பதியினர் வசித்து வந்தார்கள். ஸ்ரீதரனுக்கு மதுரை மாவட்டத்தை சேர்ந்த பெருந்துறை தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் கார்த்திகேயன் என்ற நபருடன் பழக்கமானது. இந்த பழக்கம் நாளடைவில் பரிமளா மற்றும் கார்த்திகேயன் இடையே கள்ளக்காதலாக மாறியது. இறுதியில் கணவர் ஸ்ரீதர் சாக்கு மூட்டையில் இருந்த கோலம் போலீசாரை ஆடிப்போக வைத்துள்ளது.
இந்த நிலையில் ஸ்ரீதரனுக்கு மதுரை மாவட்டத்தை சேர்ந்த பெருந்துறை தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் கார்த்திகேயன் என்ற நபருடன் பழக்கமானது ஏற்பட்டு நண்பர்களாக பழகி வந்துள்ளனர். கார்த்திகேயன், நண்பர் ஸ்ரீதரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்ததால் ஸ்ரீதரின் மனைவி பரிமளா உடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது.

மதுப்பழக்கம்
பரிமளாவுடன் அந்த பழக்கம் நாளடைவில் கார்த்திற்கும் ஸ்ரீதரின் மனைவி பரிமளாவுக்கும் கள்ளக்காதலாக மாறி இருவரும் தொலைபேசி மற்றும் வெளியில் சுற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. மதுப் பழக்கத்திற்கு அடிமையான ஸ்ரீதரன்,கார்த்திகேயனுடன் சேர்ந்து வீட்டிலேயே அவ்வப்போது மது அருந்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. அப்டித்தான் ஒரு நாள் கார்த்திகேயன் மதுவை வாங்கிக்கொண்டு ஸ்ரீதரின் வீட்டிற்கு வர ஸ்ரீதரனும் கார்த்திகேயனும் ஒன்றாக சேர்ந்து மது அறிந்துள்ளனர்.
உல்லாசம்
தலைக்கேறிய மது போதையில் ஸ்ரீதரன் மயங்கி கிடக்க, வீட்டில் பரிமளா உடன் கார்த்திகேயன் இருவரும் அறையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மது போதையில் மயங்கி இருந்த ஸ்ரீதரன் மயக்கம் தெளிந்து வீட்டின் படுக்கை அறையில் பார்த்தபோது கார்த்திகேயன் மற்றும் பரிமளா ஆகியோர் உல்லாசத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
கள்ளக்காதல்
இதனை அடுத்து கடும் கோபத்தில் இருந்த கணவன் ஸ்ரீதரனை சமாதானம் படுத்துவதாக கூறி , கள்ளக்காதலன் கார்த்திகேயன் மது அருந்துவதற்காக ஈங்கூர் பகுதிக்கு அழைத்துச் சென்று கார்த்திகேயன், தான் வைத்திருந்த கருப்பு டீ சர்ட்டை பயன்படுத்தி கொடூரமான முறையில் ஸ்ரீதரின் கழுத்தை நெரித்து கொலை செய்தாராம். பின்பு உன் கணவனை கொலை செய்து விட்டேன் என அவரது மனைவி பரிமளாவுக்கு கள்ளக்காதலன் கார்த்திகேயன் தெரியப்படுத்தினாராம்.. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பரிமளா சாக்கு மூட்டையில் கணவனை முடிந்து வாய்க்கால் மேட்டில் உள்ள புதர் பகுதியில் மறைத்து வைத்து ஈரோட்டில் இருந்து தப்பி சென்று விட்டார்களாம்.
சாக்குமூட்டை
சாக்கு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீச அப்பகுதி மக்கள் இது குறித்து பெருந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மூட்டையை அவிழ்த்து பார்க்கும் பொழுது அதில் ஸ்ரீதரன் இறந்த நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக ஸ்ரீதர்னின் உடலை பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர்.
பரிமளா கைது
போலீசார் நடத்திய விசாரணையில் தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவன் ஸ்ரீதரனை நாங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து கொலை செய்த என போலீசார் விசாரணையில் மனைவி பரிமளா மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் ஒப்புக்கொண்டுள்ளார்களாம். பரிமளா மற்றும் கார்த்திகேயனை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வேக்னர் கார் இருசக்கர வாகனம் கருப்பு நிறம் டீ சர்ட் மற்றும் அரிவாள் போன்ற பொருட்களை பறிமுதல் செய்ததோடு நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர். கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கள்ளக்காதலுடன் இணைந்து மனைவி,கணவனை தீர்த்து கட்டிய சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications