ஈரோடு அம்மாபேட்டை சவிதா.. தாய் வீட்டுக்கு போக ஆசைப்பட்டு.. கடைசியில் இப்படியா ஆகணும்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள சிங்கம்பேட்டை சூடமுத்தான்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார்.இவரது மனைவி சவிதா. இவர்களுக்கு திருமணம் ஆகி மூன்றரை வருடங்கள் ஆகிறது. கடந்த 3 நாட்கள் முன்பு, கோபி அருகே கூகலூரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டு வருவதாக சவிதா கூறினாராம். இதில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாம். அதன்பிறகு சவிதா எடுத்த முடிவால், தற்போது பெற்றோர் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறார்கள். கணவரை விசாரித்து வருகிறார்கள்.

திருமணம் ஆன முதல் சில வருடங்களில் கருத்து வேறுபாடுகள் இயல்பாவே வரும். ஒருவரின் குணத்தை புரிந்து கொள்ள இன்னொருவருக்கு நேரம் எடுக்கும். அதேபோல் பெண் வீட்டாருக்கு ஆதரவாக இருப்பதாக மாப்பிள்ளை மீதும், மாப்பிள்ளை வீட்டாருக்கே ஆதரவாக இருப்பதாக பெண் மீதும் கோபப்படும் அளவிற்கு காலங்கள்இருக்கின்றன. இருவரும் யாருக்காகவும் முடிவு எடுக்காமல் அவர்களுக்குள்அவர்களுக்காக முடிவெடுத்தால் பிரச்சனை ஏற்படுவது இல்லை..

What did Savitha from Singampet near Ammapet Erode district do

மாறாக பெண் மீது மாப்பிள்ளை தனது அம்மா அப்பாவிடமும், மாப்பிள்ளை மீது பெண், தன் அப்பா, அம்மாவிடம் புகார் அளிப்பதும் நடக்கிறது. அதேபோல் பெண் வீட்டில் ஒவ்வொரு முடிவினையும் பெண் வீட்டின் பெற்றோர் முடிவு செய்ய விரும்புகிறார்கள். இதேபோல் தனது மகன் வீட்டில் ஒவ்வொரு முடிவினையும் தாங்கள் எடுக்க வேண்டும் என்று பெற்றோரும் முடிவெடுக்கிறார்கள்.

இந்த சண்டை ஒரு கட்டத்தில் முற்றிப்போய் குழப்பங்கள் ஏற்படுகிறது. அத்துடன் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளுக்காக குடும்பத்தில் தவறான முடிவெடுக்கிறார்கள். இது பொதுவாக நடக்கிறது. அதேநேரம் குடும்பத்தில் ஏற்படும் சின்ன சின்ன சண்டைக்காக பெண்கள் தவறான முடிவெடுப்பது அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டம் அம்மாப்பேடையில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள சிங்கம்பேட்டை சூடமுத்தான்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவர் கோனேரிப்பட்டி பிரிவு பகுதியில் ஹார்டுவேர் கடை வைத்து உள்ளார். இவருடைய மனைவி சவிதாவுக்கு 23 வயது ஆகிறது. இவர்களுக்கு திருமணமாகி 3½ ஆண்டுகள் ஆகிறது. 2½ வயதில் பெண் குழந்தை இருக்கிறது. கடந்த 3 நாட்களாக கோபி அருகே கூகலூரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டு வருவதாக சவிதா கூறி வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் தாய் வீட்டுக்கு சென்று விட்டு வருவதாக சவிதா, கிருஷ்ணனிடம் கூறி உள்ளார். ஆனால் அவர் மதியம் செல்லலாம் என கூறிவிட்டு கடைக்கு சென்றுவிட்டார். இதனால் சவிதா மனமுடைந்து வீட்டில் கயிறு கட்டி தொங்கினார். இதைக்கண்டதும், அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சவிதா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் சவிதாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய பெற்றோர் அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சவிதாவுக்கு திருமணமாகி 3½ ஆண்டுகள் ஆவதால் இதுதொடர்பாக கோபி ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அம்மாபேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+