"காட்டுப்பன்றிகள்".. கிழிந்து தொங்கிய பசுமாட்டின் வாய்.. ஈரோட்டில் நடந்த கொடுமை..!

வெடிகுண்டு கடித்ததில் பசுமாட்டு வாயில் ரத்தம் கொட்டி உள்ளது

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: இன்னொரு சோகமான சம்பவம் ஈரோட்டில் நடந்துள்ளது.. பசுமாட்டின் வாயில் ரத்தம் கொட்டிய நிலையில் அது தொடர்பான விசாரணையும் உடனடியாக போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

வாயில்லா ஜீவனங்கள் உயிரிழப்புகள் இந்தியாவில் அதிகரித்தபடியே வருகின்றன... தெரிந்தும், தெரியாமலும், வேண்டுமென்றும் இதுபோன்ற அநியாய மரணங்கள் விலங்குகளுக்கு ஏற்பட்டு விடுகின்றன.

ஒருமுறை இமாச்சல பிரதேசம் பிலாஸ்பூர் மாவட்டத்தின் ஜன்துட்டா பகுதியில் ஒரு பசுவுக்கு வெடி வைத்துவிட்டனர்.. அந்த பசு ஒரு கர்ப்பிணி.. பசிக்காக வந்து கோதுமை மாவை சாப்பிட்டுள்ளது.. அதை சாப்பிட்டதுமே பசுவின் வாய் வெடித்து ரத்தம் கொட்ட தொடங்கி உள்ளது.

திருச்சி

திருச்சி

அதேபோல, நம் திருச்சியிலும் வெடி வைத்து ஒரு நரியை வேட்டையாடினார்கள்.. வேலூரில் சினை பசு ஒன்று, பசிக்காக புல்லை சாப்பிட வந்தபோது, வெடி குண்டு வெடித்ததில், அந்த பசுவின் வாய் சிதறிவிட்டது.. அதன் வாய் முழுதும் ரத்தம் கொட்டி சதை தொங்கியேவிட்டது.. சித்தூர் மாவட்டத்தில் பஞ்சனி என்னும் பகுதி உள்ளது.. இங்கு பசு மாடு ஒன்று மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு சென்றுள்ளது. அப்போது அங்கு இருந்த பொருளை சாப்பிட சென்றுள்ளது..

பசுமாடு

பசுமாடு

அது வெடிகுண்டு என்று தெரியாமல் கடித்து விட்டது. இதில் அதன் வாய் பகுதி சிதைந்து கிழிந்து தொங்கிவிட்டது.. இதுபோன்ற காரணங்களினால், இந்த பசுக்கள், ஆடுகளால், எதையும் சாப்பிட முடியாத நிலையும், ஆறாத ரணமும் ஏற்பட்டுவிடுகிறது. அதுபோலவே ஈரோட்டில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது.. பவானிசாகர் அடுத்த பசுவபாளையத்தைச் சேர்ந்தவர் மல்லிராஜ்.. 43 வயதாகிறது.. இவர் பசு மாடுகள், ஆடுகளை வளர்த்து வந்தார்...

பசுமாடுகள்

பசுமாடுகள்

இவரது பசு மாடுகள் அதே பகுதியில் உள்ள காட்டு பகுதியில் மேய்ச்சலுக்கு செல்வது வழக்கம். அப்படித்தான், சம்பவத்தன்று மாடுகள் பக்கத்தில் இருக்கும் காட்டுப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றது.. அந்த நேரத்தில் திடீரென வெடிச்சத்தம் கேட்டது. இதையடுத்து மல்லிராஜ், பதறிக் கொண்டு காட்டுக்குள் ஓடினார்.. அங்கே தன்னுடைய பசுமாட்டின் வாய் சிதைந்து ரத்தம் கொட்டி நின்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்..

போலீசார்

போலீசார்

இதுகுறித்து உடனடியாக பவானி சாகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவும், அவர்கள் விசாரணையில் ஈடுபட்டனர்.. அந்த பகுதியில் காட்டுப் பன்றிகளை வேட்டையாட மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டை மாடு கடித்துவிட்டது, அதனால் வாய் கிழிந்து ரத்தம் கொட்டியதும் தெரியவந்தது.. இதையடுத்து கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாட்டை அழைத்து சென்றனர்.

வெடிகுண்டுகள்

வெடிகுண்டுகள்

வழக்கமாக, காட்டுப்பகுதியில் மான், காட்டு பன்றிகளை வேட்டையாடும் கும்பல்கள், இப்படி நாட்டு வெடிகுண்டுகளையும் மறைத்து வைத்துவிடுவதால், சிக்கி ஆடு, மாடுகள் பலியாவதாகவும், அதனால் இத்தகைய வேட்டை கும்பல் மீது போலீசார் மற்றும் வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+