ஈரோடு சப்-இன்ஸ்பெக்டர் சசிக்குமார்.. படுக்கை அறையில் கண்ட காட்சி.. கலங்கி நிற்கும் மனைவி
ஈரோடு: ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே வீரப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் என்பவர் , ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சிவகாமி. சப் இன்ஸ்பெக்டர் சசிக்குமார் நேற்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்தவர், காலையில் எழுந்திரிக்கவே இல்லை.. அறை கதவை திறந்த போது தான், கணவன் இருந்த கோலத்தை கண்டு கலங்கி போனார்.. என்ன நடந்தது என்று பார்ப்போம்.
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள வீரப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதாகும் சசிக்குமார் என்பவர் ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சிவகாமி (32). சிவகாமி ஈரோடு மாவட்டம் வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு திவ்யஸ்ரீ (10) என்ற மகளும், அஸ்வந்த் (8) என்ற மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டுக்கு வந்த சசிக்குமார் சாப்பிட்டு அறைக்குள் தூங்க சென்றார்

இந்தநிலையில் நேற்று காலை 8 மணிக்கு மேல் ஆகியும் சசிக்குமார் அறை கதவை திறக்கவே இல்லை... இதனால் சந்தேகம் அடைந்த சிவகாமி அறை கதவை திறந்து பார்த்தார். அப்போது உள்ளே மின் விசிறியின் கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு சசிக்குமார் தொங்கிக் கொண்டு இருந்தார். அதைப்பார்த்து சிவகாமி அலறினார்.சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சசிக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சசிக்குமார் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்கள்.
இதுகுறித்து அறச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். சசிக்குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார். குடும்ப தகராறா?, அல்லது பணிச்சுமையா?, வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து அறச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications