ஈரோட்டில் சப்- இன்ஸ்பெக்டர் பைக்கில் சென்ற போது.. குறுக்கே எமனாக வந்த நாய்.. கைவிட்ட ஹெல்மெட்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே அடுத்த சென்னசமுத்திரம் வருந்தியாபாளையத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் மலையம்பாளையம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். நேற்று காலை வீட்டில் இருந்து மலையம்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு தனது இருசக்கர வாகனத்தில் மோகன்ராஜ் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். தலை கவசம் அணிந்தபடி தான்.. அந்த சாலையில் திடீரென ஒரு நாய் குறுக்கே வந்து எமனாக மாறியது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சாலைகளில் செல்வோருக்கு தெருநாய்கள் பல எமனாக இருக்கின்றன. தெருநாய்களை அப்புறப்படுத்தக்கூடாது என்ற சட்டம் காரணமாக எல்லா பகுதிகளிலும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. தெருநாய்கள் பராமரிப்பு குறித்து சரியான புரிதல்களோ, அதை பற்றி விவரங்களோ இதுவரையில் இல்லை. தெரு நாய்கள் தொடர்பாக மத்திய அரசு புதிய சட்டங்களை இயற்றினால் தான் நிரந்தர தீர்வு ஏற்படும்.

விரட்டும் தெரு நாய்கள்
ஏனெனில் தெருநாய்களுக்கு பயந்து இருசக்கர வாகனத்தில் செல்ல முடியாத நிலை பல சாலைகளில் இருக்கிறது. இரவில் கூட்டாக சேர்ந்து குழந்தைகளை விரட்டி விரட்டி கடிக்கின்றன. சில நேரங்களில் பெண்களையும் கடிக்கின்றன. இருசக்கர வாகனத்தில் வரும் ஆண்களை விரட்டுகின்றன. இது தொடர்கதையாக உள்ளது. ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே தெருநாய் ஒன்று குறுக்கே வந்ததால் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் இன்று உயிருடன் இல்லை.
சப் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ்
ஈரோடு மாவட்டம் கொடுமுடியை அடுத்த சென்னசமுத்திரம் வருந்தியாபாளையத்தை சேர்ந்த 56 வயதாகும் மோகன்ராஜ் என்பவர் மலையம்பாளையம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி சித்ரா செல்வி. இவர் கொடுமுடி சார்பு நீதிமன்றத்தில் தட்டச்சராக வேலை செய்து வருகிறார். சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் நேற்று காலை வீட்டில் இருந்து மலையம்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
நாய் குறுக்கே வந்தது
கொடுமுடியை அடுத்த வெங்கம்பூர் அருகே சென்றபோது மோகன்ராஜின் பைக்கின் குறுக்கே திடீரென நாய் வந்தது. இதில் நிலைதடுமாறிய அவர் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். அப்போது அவர் அணிந்திருந்த ஹெல்மெட் கழன்று விழுந்துவிட்டது. இதனால் அருகே இருந்த மின் கம்பத்தில் அவருடைய தலை பலமாக மோதியது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications