நீங்க நாடாரா? தூத்துக்குடியில் போட்டியிட்டது ஏன்? பெரியார் விவகாரத்தில் கனிமொழிக்கு, சீமான் கேள்வி
ஈரோடு: பெரியார் விவகாரத்தில் சீமானை மறைமுகமாக கூலிக்காரர்கள் என்று கனிமொழி எம்பி விமர்சித்து இருந்தார். இதற்கு, ‛‛உங்க அப்பா தான் பெரிய கூலி. சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு என்றால் நீங்கள் ஏன் தூத்துக்குடியில் 2 முறை போட்டியிட்டீர்கள்?. கனிமொழி நாடார் என்றால் உதயநிதி ஸ்டாலின், முக தமிழரசு எல்லாரும் நாடார் தானே. ஒரு அப்பாவுக்கு 2 ஜாதி இருக்குமா?'' என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பெரியாரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்களும், பெரியாரிஸ்ட்டுகளும் சீமானை சாடி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று தூத்துக்குடி எம்பி கனிமொழி, சீமானை விளாசினார். சீமானின் பெயரை கூறாமல் பேசிய கனிமொழி ‛‛தந்தை பெரியாரை இழிவுப்படுத்தும் சில கூலிக்காரர்களை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொழுது போக வேண்டும் என்பதற்காக கவர்னரை கொண்டு வைத்துள்ளார்கள்'' என்று கூறினார்.
இதுபற்றி ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டு வரும் சீமானிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். திமுக எம்பி கனிமொழி எம்பி, ‛‛உங்களை கூலிக்காரர்கள் என்று விமர்சனம் செய்துள்ளாரே?'' என்று பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு சீமான் பதிலளித்து கூறியதாவது:
அவரது (கனிமொழி) தந்தை கருணாநிதி மற்றும் திமுகவை தோற்றுவித்த அண்ணாவை தான் கூறுகிறார். ஏனென்றால் நான் பெரியாரை இழிவுப்படுத்தவில்லை. பெரியார் என்ன பேசியிருந்தாரோ? எழுதியிருந்தாரோ? அதை எடுத்து பேசுகிறேன். கனிமொழி உள்பட அனைவரும் பெரியாரை பற்றி தான் பேசுகிறார்கள். பெரியார் என்ன பேசினார்? பெரியார் என்ன எழுதி வைத்தார்? என்று கூறும் துணிவு யாருக்கும் இல்லை. பெரியார் யார் தெரியுமா? என்று கேட்கிறீர்கள். தெரியவில்லை சொல்லுங்கள் என்றால் சொல்ல மறுக்கிறீர்கள்.
பெரியாரை திமுகவின் அண்ணா, கருணாநிதியை விட யாராவது இழிவாக பேசி இருக்கிறார்களா? நீங்கள் (கனிமொழி) சொல்லும் பெரிய கூலி உங்க அப்பா தான். நீங்கள் உங்க அப்பாவை தான் எதிர்த்து பேசி கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு பெரியாரிஸ்ட்டா? எந்த இடத்தில் கடவுள் மறுப்பு கொள்கையிலா? மருமகன் உதயநிதி நெற்றியில் திருநீர் பூசினீர்களா? இல்லையா? சமூக நீதி, பெண்ணிய உரிமைக்கு வருவோம். உங்கள் கட்சியில் பெண்ணுரிமைக்கு கொடுத்ததை பேச முடியுமா?
சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு என்றால் நீங்கள் ஏன் தூத்துக்குடியில் 2 முறை போட்டியிட்டீர்கள்?. தமிழ்நாட்டில் இத்தனை தொகுதிகள் உள்ளபோது தூத்துக்குடிக்கு போய் போட்டியிட்டது ஏன்? சென்னை, கோவை, ஈரோடு, சேலம், வேலூர், விழுப்புரத்தில் போட்டியிட்டு இருக்கலாமே? காரணம் என்ன? எதற்கு தூத்துக்குடியில் போய் நின்றீர்கள்? இதுதான் ஜாதி ஒழிப்பா? அங்கு பாவப்பட்ட மக்கள் இருக்காங்க.
இன்னும் அந்த மக்கள் தன் ஜாதி என்று உங்களை (கனிமொழி)நம்புறாங்க பாருங்க.. அந்த அளவுக்கு மக்களை பைத்தியக்காரர்களாக மாற்றி வைத்துள்ளீர்கள் நீங்கள். உங்க ஆளு, உங்க ஜாதிக்காரர் என்று நம்ப வைக்கின்றீர்கள். கருணாநிதி மகள் எப்படி நாடாராக இருக்க முடியும்? கனிமொழி நாடார் என்றால் உதயநிதி ஸ்டாலின், முக தமிழரசு எல்லாரும் நாடார் தானே. ஒரு அப்பாவுக்கு 2 ஜாதி இருக்குமா? அப்படி என்றால் எந்த அடிப்படையில் தூத்துக்குடியில் போய் நின்றீர்கள்? பெரியாரை பற்றி ஏதாவது பேச தகுதி இருக்கா? சும்மா கூலி, காலினு சொல்லிக்கிட்டு.. பெரிய கூலியே உங்க அப்பா தான்'' என்று காட்டமாக தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications