ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! வாக்கு எண்ணிக்கையில் தாமதம்.. என்ன காரணம்! தேர்தல் அலுவலர் பரபர தகவல்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தாமதமாகிறது
ஈரோடு: ஈரோடு கிழக்கில் காலை முதலே வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக அங்கு வாக்குவாதமே கூட நடந்தது. இதற்கிடையே காலதாமதத்திற்கு என்ன காரணம் என்று தெரிய வந்துள்ளது.
ஈரோடு கிழக்கில் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவை அடுத்து அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த வாரம் அங்குத் தேர்தல் நடைபெற்ற நிலையில், இப்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
இதில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் என 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.. வாக்குப்பதிவுக்கு முன்பு, ஈரோட்டில் அனைத்து கட்சிகளும் இதில் தீவிர பிரசாரத்தில் இறங்கினர்.

ஈரோடு இடைத்தேர்தல்
ஆளும் கட்சியாக இருப்பதால் திமுக தரப்பு இந்தத் தேர்தலைக் கவுரவ பிரச்சினையாகக் கருதியது. இதனால் காங்கிரஸ் தங்கள் வேட்பாளரை அறிவிக்கும் முன்னரே, திமுக மூத்த தலைவர்கள் பிரசாரத்தில் இறங்கினர். அமைச்சர் கேஎன் நேரு தொடங்கிப் பல முக்கிய அமைச்சர்கள் ஈரோடு கிழக்கிலேயே முகாமிட்டிருந்தனர். அதேபோல கடைசி நாளன்று முதல்வர் ஸ்டாலினும் பிரசாரம் செய்தார். திமுக சார்பில் அங்கு தீவிரமான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.

அதிமுக
அதிமுகவில் வேட்பாளர் அறிவிப்பில் இருந்தே குழப்பம் இருந்தது. அங்கு எடப்பாடி பழனிசாமி தென்னரசுவை வேட்பாளராக அறிவித்த நிலையில், ஒபிஎஸ் தரப்பிலும் செந்தில் முருகனை வேட்பாளராக அறிவித்தனர். இரு தரப்பும் தேர்தல் வேலைகளையும் தொடங்கியது. இதனால் அதிமுக தொண்டர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து இதில் நீதிமன்றம் தலையிட்ட பின்னரே, அதிமுக தொண்டர்களுக்கு ஒரு தெளிவு ஏற்பட்டது. ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற்ற நிலையில், தென்னரசு அதிமுக சார்பில் களமிறங்கினார்.

காலதாமதம்
அமமுகவும் இதில் போட்டியிடாத நிலையில், இதில் காங்கிரசுக்கு அதிமுக பெரும் போட்டியைத் தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், தேர்தல் முடிவுகள் அதற்கு நேர்மாறாக உள்ளது. இப்போது வரை காங்கிரஸ் வேட்பாளர் அதிமுக வேட்பாளரைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிக வாக்குகளை பெற்றுள்ளார். ஒரு கட்டத்தில் அதிமுக வேட்பாளருக்கு டெபாசிட் கிடைக்குமா என்ற சூழல் இருந்தது. இருப்பினும், ஒரு மாதிரி டெபாசிட்டுக்கு தேவையான 28300 வாக்குகளை பெற்றது அதிமுக. இதற்கிடையே காலை முதலே வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

என்ன காரணம்
இது தொடர்பாக அங்கு வாக்குவாதமே கூட நடந்தது. இதற்கிடையே காலதாமதத்திற்கு என்ன காரணம் என்று தெரிய வந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போது 10வது சுற்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இணையச் சேவை பாதிப்பு காரணமாகத் தேர்தல் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது வரை 6 சுற்று வாக்குப்பதிவுகள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தீர்வு
இணையச் சேவை பிரச்சனையால் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விபரங்களை அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் பதிவேற்ற முடியாமல் இருந்தது.. இந்நிலையில் அதற்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. கூடுதலாக கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களைப் பயன்படுத்தி இணையதளத்தில் 7வது சுற்று ஓட்டு எண்ணிக்கை விபரங்களைப் பதிவேற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த சுற்று வாக்குகளும் விரைவில் இற்றை செய்யப்படும் எனத் தெரிகிறது.

என்ன சிக்கல்
ஈரோடு கிழக்கில் மொத்தம் 14 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சில கிமீ தூரத்தில் குன்றின் மேல் அமைந்துள்ளது. இந்த இடத்தில் இயல்பாகவே செல்போன், இணையச் சேவை குறைவாக இருக்குமாம். இதன் காரணமாகவே இப்போது தேர்தல் முடிவுகளைப் பதிவேற்றம் செய்வதிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications