திமுக vs அதிமுக.. எது சிறந்த அரசு! யாருக்கு செல்வாக்கு அதிகம்! நெருங்கும் ஈரோடு தேர்தல்! புது சர்வே
ஈரோடு கிழக்கு நெருங்கும் நிலையில் புதிய சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே ஸ்பிக் மீடியா நடத்திய கருத்துக்கணிப்பில் எந்த அரசு சிறந்த அரசு என்பது குறித்த கேள்விக்கு மக்கள் தங்கள் பதில்களை அளித்துள்ளனர்.
ஈரோடு கிழக்கில் திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல் நெருங்கியுள்ளது. இன்னும் இரு நாட்களில் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
இன்று மாலையுடன் பிரசாரம் ஓயும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் அங்குத் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளன. முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போட்டி
இந்தத் தேர்தலில் ஆளும் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸில் இருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாகக் காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமில்லாமல் திமுக தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். அதேபோல அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார். பாஜக உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாலும், ஓபிஎஸ், டிடிவி தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளதாலும் அதிமுக தொண்டர்கள் நம்பிக்கையுடன் தேர்தலை எதிர்கொள்கிறார்கள்.

பிரசாரம்
கடந்த 1.5 ஆண்டுகளில் திமுக அரசு சார்பில் செய்யப்பட்ட சாதனைகளை முன்னிறுத்தி திமுகவினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். பல டாப் அமைச்சர்கள் நேரடியாகக் களத்தில் இறங்கி பிரசாரம் செய்து வருகின்றனர். அதேநேரம், உரிமை தொகை, முதியோர் ஓய்வூதியம் நிறுத்தப்படும் புகார்களை முன்வைத்து அதிமுகவினர் பிரசாரம் செய்து வருகின்றனர். மேலும், எந்தவொரு அரசாக இருந்தாலும் அரசுக்கு எதிரான மனநிலை எப்போதும் உருவாகும். அதையும் அதிமுக தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறது.

கருத்துக்கணிப்பு
இதற்கிடையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அங்கு ஸ்பிக் மீடியா மற்றும் அஜய் பவுன்டேஷன் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. இதற்காக கடந்த பிப். 5 முதல் பிப்.17 வரை அங்குள்ள மக்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஈரோட்டில் மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் இருக்கும் நிலையில், அதில் 202 பூத்களில் இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது.

செயல்பாடு மோசம்
இந்த சர்வேயில் ஈரோடு கிழக்கை காங்கிரஸ் தக்கவைக்கும் என்றே மக்கள் கூறியதாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சமும் உள்ளது. அதாவது திமுக அரசு ஆட்சிக்கு வந்த 1.5 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அரசுக்கு எதிரான மனநிலை மக்களிடையே மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதில் சர்வேயில் சுமார் 48% மக்கள் திமுக அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

எடப்பாடியை டிக் அடித்த மக்கள்
அதேபோல 38% மக்கள் தங்களால் அரசின் திட்டங்களை அணுக முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும், 44% மாநிலத்தின் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று கூறியுள்ள நிலையில், 40% பேர் மின் கட்டண உயர்வால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். எந்த அரசு சிறந்த அரசு என்ற கேள்விக்கு 39% பேர் எடப்பாடி தலைமையிலான முந்தைய அதிமுக அரசு சிறப்பாக பணியாற்றியதாகத் தெரிவித்தனர். தற்போதைய அரசுக்கு 38% மக்கள் மட்டுமே ஆதரவாகக் கருத்து கூறியுள்ளனர்.

அதிமுக
அதிமுக குறித்த கேள்விகளில் 61% அதிமுக முழுமையாக எடப்பாடி கட்டுப்பாட்டில் செல்ல வேண்டும் என நினைக்கிறார்கள். அதிமுக வலிமையாக உள்ள கொங்கு மண்டலத்தில் இருந்தே இப்படியொரு கருத்து வந்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல சுமார் 68% பேர் ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் அதிமுகவைப் பாதிப்பதாகக் கருத்து கூறியுள்ளனர். மேலும் 38% பேர் டிடிவி தினகரனின் செயல்பாடுகளும் திருப்தி அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

தலைவர்கள்
தமிழ்நாட்டின் சிறந்த தலைவர் என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலினை அதிகபட்சமாக 25% பேர் தேர்வு செய்துள்ளனர். இருப்பினும், முதல்வரின் ஆதரவு கடந்த 9 மாதங்களில் 11% குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், உதயநிதியை 10% மக்கள் கூறியுள்ளனர். அதேநேரம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 19% பேரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆதரவாக 14% பேரும் கருத்து கூறியுள்ளனர். இருவருக்கும் கடந்த 9 மாதங்களாக மக்களின் ஆதரவு கணிசமாக அதிகரித்துள்ளது.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications