ஈரோடு கிழக்கு தேர்தலில் இந்த கட்சிக்கு தான் வெற்றி.. வாகைசூடும் வேட்பாளர் யார்? பரபர சர்வே முடிவு!
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு வரும் 27 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 77 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். தொகுதியில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் தான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்? என மேற்கொள்ளப்பட்ட சர்வே முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்த சர்வே முடிவின் முக்கிய விபரங்கள் வருமாறு:
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா காலமான நிலையில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 27 ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த தொகுதியில் ஆளும் திமுக போட்டியிடவில்லை. மாறாக திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் தென்னரசு களமிறங்கி உள்ளார். தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் உள்பட ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர்.

இறுதிக்கட்ட பிரசாரம்
தொகுதியில் தற்போது தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்ட உள்ளது. நாளையும் பிரசாரம் முடிவுக்கு வர உள்ளதால் வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து நாளை முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். மேலும் அதிமுக வேட்பாளர், தேமுதிக, நாம் தமிழர் கட்சியின் தலைவர்களும் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இடைத்தேர்தல் பற்றி சர்வே
இந்நிலையில் தான் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் குறித்து Spick Media மற்றும் அஜய் பவுண்டேஷன் இணைந்து சர்வே மேற்கொண்டது. பிப்ரவரி 5ம் தேதி முதல் பிப்ரவரி 1மோ் தேதி வரை இந்த சர்வே நடந்தது. 14,160 பேரிடம் தமிழ், ஆங்கிலத்தில் வினாப்பட்டியல் வழங்கி சர்வே மேற்கொள்ளப்பட்டது. இந்த சர்வே முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

திருமகன் ஈவெரா பற்றிய கேள்வி
ஈரோடு கிழக்கு தொகுதியின் மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் செயல்பாடு எப்படி இருந்தது? என்ற கேள்விக்கு மிகச்சிறப்பாக இருந்ததாக 21.66 சதவீதம் பேரும், சிறப்பாக இருந்ததாக 25.38 சதவீதம் பேரும், மோசமாக இரந்தது என 21.40 சதவீதம் பேரும், மிகவும் மோசமாக இருந்ததாக 21.11 சதவீதம் பேரும், பதில் இல்லை என 10.45 சதவீதம் பேரும் பதில் அளித்துள்ளனர்.

காங்., கமல்ஹாசன் ஆதரவு ஏன்?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு 29.45 சதவீதம் பேர் ஏமாற்றமளிப்பதாகவும், 25.08 சதவீதம் பேர் வெற்றி முக்கியம் எனவும், 34.22 சதவீதம் பேர் எதிர்பார்த்தது தான் எனவும், 11.25 சதவீதம் பேர் பதில் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

தொகுதி பிரச்சனைகள் என்ன?
மேலும் தொகுதியில் உள்ள முக்கிய பிரச்சனைகள் என்ன? என்ற கேள்விக்கு குடிநீர் தட்டுப்பாடு என 4.52 சதவீதம் பேரும், மின்தடை என 19.10 சதவீதம் பேரும், வேலையின்மை என 30.50 சதவீதம் பேரும், விலைவாசி உயர்வு என 13.47 சதவீதம் பேரும், அச்சம்/திருட்டு என 3.54 சதவீதம் பேரும், வினாப்பட்டியலில் இல்லாத பிற பிரச்சனைகள் என 16.24 சதவீதம் பேரும், பதில் இல்லை என 12.36 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

யாருக்கு வாக்களிப்பீர்கள்?
இதையடுத்து சின்னத்தை பார்த்து வாக்களித்தால் நீங்கள் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள்? என்ற கேள்விக்கு காங்கிரஸ் என 50.39 சதவீதம் பேரும் அதிமுக என 35.29 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சி என 5.02 சதவீதம் பேரும், பிற கட்சியினர் என 4.53 சதவீதம் பேரும், பதில் இல்லை என 4.77 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். மேலும் இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு காங்கிரஸ் கட்சி என்று 57.40 சதவீதம் பேரும் அதிமுக என 31.56 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சி எனஅ 4.23 சதவீதம் பேரும், மற்றவர்கள் என 3.47 சதவீதம் பேரும், பதில் இல்லை என 3.34 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

வெற்றி யாருக்கு?
மேலும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒட்டுமொத்த சர்வேயின் படி காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளிப்பதாக 47.75 சதவீதம் பேரும், அதிமுகவுக்கு ஓட்டளிப்பதாக 6.66 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டளிப்பதாக 6.88 சதவீதம் பேரும், தேமுதிகவுக்கு ஓட்டளிப்பதாக 1.97 சதவீதம் பேரும், மற்றவர்கள் என 2.34 சதவீதம் பேரும், பதில் இல்லை என 4.40 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய சூழலில் திமுக மீதான அதிருப்தி என்பது எந்த வகையிலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பிரச்சனையை ஏற்படுத்தாது என சர்வே முடிவு தெளிவாக கூறியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications