இளங்கோவன் ஜெயிச்சது இருக்கட்டும்.. அந்த ‘ரேஸ்’ல ஜெயிச்ச அமைச்சர் யார்? இங்கேயும் அவர் தான் டாப்பா?

ஈரோடு கிழக்கில் யார் அதிக வாக்குகள் பெற்றுத் தருவது என்ற ரேஸ் அமைச்சர்கள் மத்தியில் நடைபெற்று வந்தது.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெற்றது ஒருபக்கம் இருக்க, அமைச்சர்களிடையே நடந்த ரேஸில் யார் முந்தியது என்பதுதான் திமுகவினர் மத்தியில் தற்போது ஹாட் டாபிக்.

ஈரோடு கிழக்கில் திமுக அமைச்சர்களுக்கு இத்தனை பூத்கள் என பொறுப்பு வழங்கப்பட்டு, தீவிரமாக பணியாற்றி வந்தனர். தாங்கள் தேர்தல் பணியாற்றும் பூத்களில் அதிக வாக்குகள் பெற்றால் முதல்வரின் குட் புக்கில் இடம்பெறலாம் என்பதால் இரவு பகல் பார்க்காமல் வேலை பார்த்து வந்தனர்.

வாக்கு எண்ணிக்கை முடிவில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ள நிலையில், அமைச்சர் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி உள்ளிட்டோர் பணியாற்றிய பகுதிகளில் தான் 'கை' சின்னத்திற்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளதாம்.

மாஸ் வெற்றி

மாஸ் வெற்றி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த முறை இந்த தொகுதியில் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திருமகன் ஈவெரா வென்ற நிலையில், இந்த முறை அதைவிட பல மடங்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவ்வளவு பெரிய பிரமாண்ட வெற்றிக்காக மல்லுக்கட்டியது பூராம் திமுக அமைச்சர்கள்.

 ஸ்டாலின் ஆர்டர்

ஸ்டாலின் ஆர்டர்

தனது 22 மாத கால ஆட்சிக்கு கிடைக்கும் நற்சான்றிதழாகவும், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாகவும், உட்கட்சி பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் அதிமுகவின் வாக்கு வங்கியை சிதைத்து பெரிய அளவில் எதிரணிக்கு நெருக்கடியைக் கொடுக்கும் வகையிலும் இந்த தேர்தல் முடிவு அமைய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கணக்குப் போட்டார். அதற்காகவே, தனிக்கவனம் செலுத்தி, ஈரோடு கிழக்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆக வேண்டும் என பெரும் படையையே இறக்கினார்.

 அடித்துப் பிடித்து பணியாற்றிய அமைச்சர்கள்

அடித்துப் பிடித்து பணியாற்றிய அமைச்சர்கள்

ஈரோட்டைச் சேர்ந்த அமைச்சர் முத்துசாமி தலைமையில் பல அமைச்சர்கள் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து திமுக தலைமை உத்தரவிட்டிருந்தது. ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெற வைக்க காங்கிரஸ் கட்சியினரை விட திமுகவினர் தான் அடித்துப் பிடித்து தேர்தல் பணி செய்தனர். ஈரோடு கிழக்கில் அமைச்சர்கள் குழுவாகப் பிரிக்கப்பட்டு இந்தந்த பகுதி என பொறுப்பு கொடுக்கப்பட்ட நிலையில், தங்கள் பகுதிகளில் திமுகவுக்கு அதிக வாக்குகள் பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக போட்டி போட்டுக்கொண்டு முழுநேரமாக ஈரோட்டிலேயே இருந்து களப்பணி ஆற்றினார்கள் திமுக அமைச்சர்கள்.

சூடான விவாதம்

சூடான விவாதம்

எந்த அமைச்சர்கள் பொறுப்பு வகிக்கும் பகுதியில் திமுக கூட்டணிக்கு ஓட்டு குறைகிறதோ அவர்களுக்கு தலைமை 'ரெய்டு' விடும் என்பதால், அமைச்சர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு, தாங்கள் பொறுப்பாக உள்ள வார்டுகளில் கை சின்னத்திற்கு வாக்குகள் குவிய வேண்டும் என்று மும்முரமாக பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அமைச்சர்கள் இடையே நடந்த இந்த 'வோட் ரேஸில்' கடைசியில் முந்தியது யார் என்பதுதான் திமுகவில் இப்போது சூடாக நடக்கும் விவாதம்.

கை சின்னத்திற்கு

கை சின்னத்திற்கு

அமைச்சர் கே.என்.நேரு தலைமையிலான குழுவில், அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த சூரியம்பாளையம், வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள 31 வாக்குச்சாவடிகளில், ஈவிகேஎஸ் இளங்கோவன் 68.65 சதவீத வாக்குகள் பெற்றுள்ளார். அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலான குழுவில், அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் இருந்தனர். இவர்களுக்கு சூரம்பட்டி, பெரிய சேமூர் பகுதிகளில் உள்ள 39 வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டன. இந்த வாக்குச்சாவடிகளில் 60.69 சதவீத வாக்குகள் கை சின்னத்திற்கு கிடைத்துள்ளன.

 பகுதி வாரியாக

பகுதி வாரியாக

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமையிலான குழுவில், அமைச்சர்கள் ரகுபதி, கீதாஜீவன், சிவசங்கர், மெய்யநாதன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்களுக்கு பொறுப்பளிக்கப்பட்ட பெரியார் நகர் பகுதியில் உள்ள 33 வாக்குச் சாவடிகளில் திமுக கூட்டணி வேட்பாளருக்கு 57.37 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையிலான குழுவில், அமைச்சர்கள் மூர்த்தி, அனிதா ராதாகிருஷ்ணன், ராமச்சந்திரன் ஆகியோர்இடம் பெற்றிருந்தனர். இவர்கள் கவனித்துக்கொண்ட கோட்டை பகுதியில் உள்ள 33 வாக்குச்சாவடிகளில் கை சின்னத்திற்கு 61.35 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

 அமைச்சர்கள் குழு

அமைச்சர்கள் குழு

அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான குழுவில், அமைச்சர்கள் பெரியகருப்பன், ராஜகண்ணப்பன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள 21 வாக்குச்சாவடிகளில் இவர்கள் பணியாற்றினர். அங்கு இளங்கோவனுக்கு 58.75 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. அமைச்சர் சாமிநாதன் தலைமையிலான குழுவில், அமைச்சர்கள் ஆர்.காந்தி, மனோ தங்கராஜ் ஆகியோர் இடம்பெற்ற நிலையில், கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள 23 வாக்குச்சாவடிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 66.43 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

ஐ.பெரியசாமி டீம்

ஐ.பெரியசாமி டீம்

அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, மதிவேந்தன் ஆகியோர் இடம்பெற்ற குழுவினர் 23 வாக்குச்சாவடிகளில் பணியாற்றினர். அங்கு 68.86 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையிலான குழுவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சி.வி.கணேசன் மற்றும் கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் பணியாற்றினர். இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 35 வாக்குச்சாவடிகளில் 66.21 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

 ரேஸில் முந்திய அமைச்சர்கள்

ரேஸில் முந்திய அமைச்சர்கள்

இவ்வாறாக, அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, மதிவேந்தன் உள்ளிட்டோர் அடங்கிய குழுக்களில் தான் அதிகபட்சமாக 68 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் டிரான்ஸ்பர் ஆகியுள்ளனவாம். ஆக, திமுக அமைச்சர்கள் இடையே, ஈரோடு கிழக்கில் நடைபெற்ற ரேஸில் இவர்கள் தான் வென்றுள்ளனர். களப் பணிகளுக்கு பெயர் போன கே.என்.நேரு, கடந்த தேர்தலில் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் இதிலும் டாப்பாக வந்துள்ளது தான் கவனிக்கத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+