"அம்மையார்".. கமல் கொடுத்த அல்டிமேட் சிக்னல்.. பூரித்து போன ஸ்டாலின்.. பின்னணியில் உதயநிதியாமே!
கமல்ஹாசன் சொன்ன சில விஷயங்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. முதல் விஷயம் அவர் பாஜகவை நேரடியாக அட்டாக் செய்துள்ளார்
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மேற்கொண்ட பிரச்சாரம் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. அவரின் பிரச்சாரத்தில் குறிப்பிட்ட சில விஷயங்கள் திமுக தரப்பை குஷி படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தற்போது காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் நிற்க வைக்கப்பட்டு உள்ளார். முதலில் ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் சார்பாக சம்பத் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. அதன்பின் வேறு தலைவர்களை காங்கிரஸ் ஆலோசனை செய்வதாக கூறப்பட்டது. ஆனால் கடைசியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் இங்கே போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஈவிகேஎஸ் இளங்கோவன் நேரில் சென்று கமல்ஹாசனிடம் ஆதரவும் கேட்டார். இதையடுத்து நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சி இது தொடார்பாக ஆலோசனை நடத்தியது.
ஆலோசனையின் முடிவில் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவு அளிப்பதாக முடிவு எடுக்கப்பட்டது. காங்கிரஸ் - திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்

கமல்ஹாசன்
நேற்று கமல்ஹாசன் தனது பிரச்சாரத்தில், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் எனக்கும் நல்ல உறவு இருக்கிறது. எங்களுக்குள் இன்னொரு உறவும் இருக்கிறது. அவர் பெரியாரின் பேரன். நானும் பெரியாரின் பேரன்தான். இந்த தேசம் என்பது சின்னம், கொடி , கட்சி என்று அனைத்தையும் தாண்டியது. எனக்கும் பெரியாருக்கும் விட்டுப்போன உறவை இங்கே நான் மீட்டு எடுக்கிறேன். நான் அரசியலுக்கு சுய லாபத்திற்காக வரவில்லை. மக்களுக்காக வந்து இருக்கிறேன். அதனால் இப்போது இங்கே நிற்கிறேன்.

மதம்
மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் சிலர். ஆனால் நம் நாடு மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும். அதை உறுதி செய்வது இந்தியர்கள் ஒவ்வொருவரின் கடமை. ஒரு இந்தியனாக எனக்கும் அதுதான் கடமை. கட்சிக்காக வாக்களிப்பதை விட அறத்திற்காக வாக்களிக்க வேண்டும். . ஈஸ்ட் இந்தியா கம்பெனி முடிந்து விட்டது. இப்போது நார்த் இந்தியா கம்பெனி வந்து இருக்கிறது. இந்த நாட்டிற்கு ஆபத்து என்று வந்துவிட்டால் அரசியல் கொள்கை எல்லாம் பார்க்காமல் ஒன்றாக இருக்க வேண்டும். அதனால்தான் இங்கே இருக்கிறேன்.

விஸ்வரூபம்
விஸ்வரூபம் படம் வந்த போது என்னை சிலர் தடுமாற வைத்தனர். என்னை தடுமாற வைத்து ஒரு அம்மையார் சிரித்தார். கலைஞர்தான் என்னை தொடர்பு கொண்டார். என்னிடம் உதவி வேண்டுமா என்று கேட்டார். இது என்னுடைய தனிப்பட்ட பிரச்சனை. இது தேசத்தின் பிரச்சனை இல்லை. அதனால் உதவி வேண்டாம் என்று கூறிவிட்டேன். இப்போதும் கூட உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா, நான் இருக்கிறேன் என்று ஸ்டாலின் கூறினார். அரசியல் கடந்து நாம் எல்லாம் ஒன்றாக இருக்க வேண்டிய நேரம் இது என்று கமல்ஹாசன் தனது பிரச்சாரத்தில் குறிப்பிட்டார்.

அம்மையார் பிரயோகம்
இதில் கமல்ஹாசன் சொன்ன சில விஷயங்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. முதல் விஷயம் அவர் பாஜகவை நேரடியாக அட்டாக் செய்துள்ளார். ஈஸ்ட் இந்தியா கம்பெனி முடிந்து விட்டது. இப்போது நார்த் இந்தியா கம்பெனி வந்து இருக்கிறது. இந்த நாட்டிற்கு ஆபத்து என்று வந்துவிட்டால் அரசியல் கொள்கை எல்லாம் பார்க்காமல் ஒன்றாக இருக்க வேண்டும். அதனால்தான் இங்கே இருக்கிறேன், என்று கமல்ஹாசன் கூறி உள்ளார். இது பாஜக மீதான நேரடி அட்டாக். அதோடு நாட்டிற்கு ஆபத்து என்றால் ஒன்று சேர வேண்டும் என்று இவர் கூறுவதால் பெரும்பாலும் நாடாளுமன்ற தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் திமுக கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணி
இரண்டாவது விஷயம், கமல்ஹாசனின் அம்மையார் என்ற வார்த்தை பிரயோகம். ஜெயலலிதாவை அம்மையார் என்று அவர் கூறியது திமுக ஸ்டைல் அட்டாக். திமுகவில் ஸ்டாலின், கருணாநிதி, துரைமுருகன் போன்றவர்கள் பயன்படுத்தும் வார்த்தை இது. அதை கமல்ஹாசன் பயன்படுத்தி உள்ளார். அதோடு இப்போதும் கூட உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா, நான் இருக்கிறேன் என்று ஸ்டாலின் கூறினார் என்றும் ஸ்டாலினை பற்றி அன்பாக கமல்ஹாசன் பேசி இருக்கிறார். இதன் மூலம் பாஜகவை மட்டுமல்ல அதிமுகவையும் அட்டாக் செய்ய ரெடி என்பதை கமல்ஹாசன் உணர்த்துவிட்டார்.

கமல்ஹாசன்
கமல்ஹாசனின் இந்த பிரச்சாரம் திமுக தரப்பை, முக்கியமாக முதல்வர் ஸ்டாலினை பூரிப்பில் ஆழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இவர்கள் சந்திப்பு நடக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த சட்டசபை தேர்தலிலும் கூட மக்கள் நீதி மய்யம் பிரதான கட்சிகளுடன் இணையாமல் தனியாக போட்டியிட்டது. இந்த தேர்தலுக்கு பின் திமுக, காங்கிரஸ் தலைவர்களுடன் கமல்ஹாசன் அதிகம் நெருக்கம் காட்டி வந்தார். முக்கியமாக திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் நெருக்கமாக கமல்ஹாசன் பழகி வருகிறார். விக்ரம் படத்தை வெளியிட்டது, அதன்பின் கமலின் பல படங்களுடன் ஒப்பந்தம் செய்தது, இந்தியன் 2 படத்தை வெளியிட உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பிற்குள் வந்தது என்று உதயநிதி - கமல் நெருக்கமாகி உள்ளனர். இந்த நிலையில்தான் தற்போது கமல்ஹாசன் திமுகவை பற்றி அன்பாக பேசி இருக்கிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications