அசிங்கமாகிடும்.. அண்ணாமலை போடும் "சாணக்கிய" பிளான்.. ஈரோடு கிழக்கில் ட்விஸ்ட்.. இப்படி சொல்லிட்டாரே!

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் பாஜக சார்பாக அண்ணாமலை போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் இது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் பேட்டி அளித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் ஈவெரா திருமகன். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். உடல்நிலை மோசமான நிலையில் ஈவெரா திருமகன் கடந்த ஜனவரி 4ம் தேதி மரணம் அடைந்ததார்.

இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27-ம் தேதி நடைப்பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடக்கும் என்று இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் பீவர் தொடங்கி உள்ளது. இந்த இடைத்தேர்தலில் பாஜக என்ன நிலைப்பாடு எடுக்கும், தனித்து போட்டியிடுமா.. கூட்டணி வைக்குமா என்ற கேள்வி நிலவி வருகிறது.

அண்ணாமலை

அண்ணாமலை

முக்கியமாக ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் பாஜக சார்பாக அண்ணாமலை போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் இது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கில் அண்ணாமலை நிற்க மாட்டார் என்று நினைக்கிறேன். அவர் அந்த முடிவை எடுக்க வாய்ப்பு இல்லை. அந்த இடம் ஏற்கனவே அதிமுக - தமாக கூட்டணியில் நின்று தமாக வென்ற இடம். இப்போதும் வாசனுக்கும் - எடப்பாடிக்கும் நல்ல உறவு இருக்கிறது. அதனால் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் இரட்டை இலை சின்னத்தில் இங்கே நிற்கும் வாய்ப்புகள் உள்ளன. ஒருவேளை ஓபிஎஸ் முரண்டு பிடித்து இன்னொரு ஆளை இறக்கினால் சின்னம் முடங்கும். அப்படியே ஒருவேளை பாஜகவிற்கு அந்த இடம் கொடுக்கப்பட்டால், ஓபிஎஸ் இறங்கி வருவார்.

பாஜக

பாஜக

ஆனால் பாஜகவிற்கு அந்த இடம் ஒருவேளை கொடுக்கப்பட்டாலும் கூட அங்கே அண்ணாமலை போட்டியிட வாய்ப்பு இல்லை. அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்பி ஆகி, அமைச்சராக பார்க்கிறார். அவர் இங்கே போட்டியிட்டால் எம்எல்ஏதான் ஆக முடியும். அமைச்சர் ஆக முடியாது. ஆனால் மத்தியில் போட்டியிட்டால் அவர் அமைச்சராக முடியும். எல் முருகன் இணை அமைச்சராக இருக்கிறார். அண்ணாமலை கேபினெட் அமைச்சராக வேண்டும் என்ற பிளானில் இருக்கிறார். இதுதான் நான் பார்க்கும் பார்வை.

அமைச்சர்

அமைச்சர்

அவர் அமைச்சரானால் நிறைய விஷயங்களை செய்ய முடியும். அதோடு ஈரோடு கிழக்கில் அண்ணாமலை நின்று தோற்றுவிட்டால் அது பெரிய அசிங்கம் ஆகிவிடும். அதனால் அவர் போட்டியிட மாட்டார். தமாக வேட்பாளர்தான் இங்கே களமிறங்க வாய்ப்பு உள்ளது. தமாக தனியாக நிற்க முடிவு எடுத்தால், அதிமுக வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தால், தமாக வேறு சின்னத்தில் போட்டியிட முடிவு எடுத்தால் பிரச்சனை இருக்காது. ஏனென்றால் எப்படியும் ஆளும் கட்சி கூட்டணிதான் வெல்லும். அவர்களுக்குத்தான் எல்லா பலமும் இருக்கிறது.

சண்டை

சண்டை

அதிமுகவில் சண்டை இருக்கிறது. இதனால் அதிமுக வேட்பாளரை நிறுத்த வாய்ப்பு குறைவு. அப்படி அதிமுக வேட்பாளரை களமிறக்கினால் அது எடப்பாடிக்குத்தான் பாதிப்பாக அமையும். தேர்தலில் தோல்வி அடையும் பட்சத்தில் அது எடப்பாடிக்கு பெரிய பின்னடைவாக மாறும். எடப்பாடி - ஓபிஎஸ் இறங்கி போவதாக நான் கருதமாட்டேன். சட்டசபையில் ஒன்றாக அமர்ந்ததால் அவர்கள் சமாதானம் ஆகிவிட்டனர் என்று சொல்ல முடியாது. ஆனால் ஆளுநர் மாளிகையில் ஓபிஎஸ் எதிரே எடப்பாடி அமராமல் தவிர்த்து இருக்கலாம். நான் அவருடன் இருக்க மாட்டேன் என்று எடப்பாடி சொல்லி இருக்கலாம்.

ஆளுநர் விருந்து

ஆளுநர் விருந்து

அல்லது ஆளுநர் விருந்தையே எடப்பாடி புறக்கணித்து இருக்கலாம். எதிர்க்கட்சி தலைவராக தன்னுடைய இருக்கையை மாற்றி இருக்கலாம். மாற்ற வில்லை என்றால் நிகழ்வையே புறக்கணித்து இருக்கலாம். ஆனால் அங்கேயே எடப்படியால் தனித்தன்மையை தவிர்த்து இருக்கலாம். பாஜக கட்டாயப்படுத்தி இருக்கலாம். எடப்பாடி இங்கேவது கொஞ்சம் அழுத்தமாக முடிவை எடுத்து இருக்கலாம். பாஜக தன்னை அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி இப்படி இறங்கி போய் இருக்கலாம். பாஜகவின் ஆதரவை பெற அவர் ஆளுநர் மாளிகைக்கு சென்று இருக்கலாம், என்று மூத்த பத்திரிகையாளர்ம் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+