'கூண்டில் மனிதர்கள்'.. டக்கனு ரோபோ சங்கரை உள்ளே இழுத்த பிரேமலதா.. திமுகவிற்கு சரமாரி கேள்வி

"கிளியை கூண்டில் அடைத்ததற்காக நடிகர் ரோபோ சங்கருக்கு அபராதம் விதித்தது போல்.. மக்களை கூண்டில் அடைத்த திமுகவிற்கு அபராதம் விதிக்கப்படுமா?" என தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஈரோட்டில் பிரச்சாரத்தில் பேசும் போது, "ரோபோ சங்கர் கிளியை கூண்டில் அடைத்து வளர்த்தார், கிளியை கூண்டில் அடைத்ததற்கே அபராதம் விதிக்கப்பட்டது. திமுக மனிதர்களையே கூண்டில் அடைத்து வைத்துள்ளது. திமுகவிற்கு, தேர்தல் ஆணையம் என்ன அபராதம் விதிக்கும்? என கேள்வி எழுப்பினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்படைந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக ஆகிய கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். காங்கிரஸ் வேட்பாளர் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் உள்பட திமுகவின் முக்கிய தலைவர்கள் அனைவருமே ஈரோட்டில் முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி உள்பட பலரும் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர்.

மோசமான நிர்வாகம்

மோசமான நிர்வாகம்

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேமுதிக வேட்பாளா் எஸ்.ஆனந்த் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து ஈரோடு குமலன்குட்டை, சம்பத் நகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு பிரேமலதா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பிரேமலதா பேசுகையில், ஈரோடு நகரம் எந்த வளா்ச்சியும் அடையவில்லை. புதை சாக்கடைப் பணிகள் 18 ஆண்டுகளாகியும் இன்னும் முடிவடையாமல் இருக்கிறது. இதனால் ஈரோட்டில் கடுமையான சுகாதார சீா்கேடு ஏற்பட்டிருக்கிறது. ஈரோட்டில் பெரும்பாலான வீதிகளில் தெருவிளக்குகள் கூட சரியாக எரியவில்லை. அத்தகைய மோசமான நிலையில் திமுகவின் ஆட்சி நிர்வாகம் இருக்கிறது

விருப்பமே இல்லை

விருப்பமே இல்லை

காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ் இளங்கோவன் விருப்பம் இல்லாமல் இந்த தோ்தலில் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஈரோடு மக்கள் பல இடங்களில் புறக்கணிக்கின்றனா். ஆனால் தேமுதிக வேட்பாளா் எஸ்.ஆனந்த் ஒரு இளைஞா். அவா் வெற்றி பெற்றால் ஈரோடு கிழக்கு தொகுதியினை தமிழகத்தின் முதன்மை தொகுதியாக மாற்றுவார்.

மனிதர்கள் கூண்டில்

மனிதர்கள் கூண்டில்

"ரோபோ சங்கர் கிளியை கூண்டில் அடைத்து வளர்த்தார், இதை கேட்டு வனத்துறையினர் அங்கே சென்று கிளியை கைப்பற்றி 2.50லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. கிளியை கூண்டில் அடைத்ததற்கே அபராதம் விதிக்கப்பட்டது. திமுக எத்தனை ஆயிரம் மனிதர்களை கூண்டில் அடைத்து வைத்துள்ளது. திமுகவிற்கு, தேர்தல் ஆணையம் எத்தனை லட்சம் அபராதம் விதிக்கும்? தேர்தல் ஆணையம், காவல்துறையினர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்ற கேள்வி தான் மக்கள் முன்னால் வருகிறது. தோ்தல் தொடங்கியதிலிருந்து மக்களை அடைத்து வைத்துள்ளதால் நெசவு, விவசாயம், சாயப்பட்டறை என அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. மக்களை 12 மணி நேரம் அடைத்து வைத்து சித்திரவதை செய்யும் திமுக அரசுக்கு இந்த தோ்தலில் திமுகவிற்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

பண பலம்

பண பலம்

ஆட்சி அதிகாரத்தையும், பண பலத்தையும் வைத்து மக்களை ஏமாற்றும் இந்த தோ்தல் நிறுத்தப்பட வேண்டும் என தேமுதிக சார்பில் தோ்தல் ஆணையத்திடம் முறையிட்டு இருக்கிறோம். கூட்டணி இல்லாமல், வாக்குக்கு பணம் கொடுக்காமல் இந்த தோ்தலில் வெற்றிபெற முடியுமா? ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகளாகியும் திமுக அரசு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இந்த ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது. மக்களை வளா்ச்சிப் பாதையில் கொண்டுச் செல்ல திமுக, அதிமுக கட்சிகளிடம் எந்த திட்டமும் இல்லை" இவ்வாறு பிரேமலதா கூறினார். இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சாரத்தில் விஜயகாந்த் போலவே தோற்றம் உள்ளவர் தேமுதிகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவரை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+